தேசிய கீதத்தை அவமானப்படுத்தும் தமிழக அரசை கண்டிக்கிறேன்

தமிழக அரசின் ஆணவப்போக்கு மிகவும் கண்டனத்திற்கு உரியது என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Update: 2024-02-12 09:50 GMT

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாடு சட்டப்பேரவையில், இந்த ஆண்டுக்கான முதல் நாள், ஆளுநர் உரையுடன் தொடங்கும் போது, ஆளுநர் தேசிய கீதத்துடன் தொடங்க வேண்டும் என்று சொல்லியுள்ளார். அதைக் கூட செய்ய முடியாது என்ற தமிழக அரசின் ஆணவப்போக்கு மிகவும் கண்டனத்திற்கு உரியது. தராசு முள்போல இருக்க வேண்டிய சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் அவர்களை அருகில் வைத்துக்கொண்டு, எதிர்க்கட்சிகளை கேள்வி கேட்கிற அமைச்சர் போல செயல்படுகிறார் என்று தெரிவித்தார். இது தான் ஜனநாயகமா? இப்படித்தான் மக்கள் போற்றும் சட்டப்பேரவை நடத்தப்பட வேண்டுமா? என்று கேள்வி எழுப்பிய அவர்,தேசிய கீதத்தைப் புறக்கணித்து, அவமதித்து, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அவமரியாதை செய்வது தான் இந்த போலி திராவிட மாடல் ஆட்சியா...? என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News