சனாதனம் பற்றிய பேச்சு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது எப்.ஐ.ஆர்.
சனாதனம் ஒழிப்பு பற்றிய பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது எப்.ஐ.ஆர். போடவேண்டும் என சட்ட நோட்டீசு வழங்கப்பட்டு உள்ளது.;
சனாதனத்தை ஒழிப்பேன் என பேசிய உதயநிதி ஸ்டாலின் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய சென்னை காவல்துறைக்கு 7 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மகனும், தி.மு.க. இளைஞர் அணி செயலாரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சென்னையில் நடைபெற்ற தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் நடத்திய சனாதனம் ஒழிப்பு மாநாட்டில் பேசினார்.
இந்த மாநாட்டில் சனாதனம் ஒழிப்பு பற்றி உதயநிதி ஸ்டாலின் பேசியது இந்திய அளவில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. வழக்கமாக எதிர்க்கும் பாரதிய ஜனதா மட்டும் இன்றி தி.மு.க. அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணியில் உள்ள சிவசேனா கட்சி கூட தங்களது எதிர்ப்பினை பதிவிட்டு உள்ளது.
இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது, “வெறுக்கத்தக்க வகையில் பேசியதற்காக, தானாக முன்வந்து எப்ஐஆர் பதிவு செய்யாததற்காக, சென்னை காவல் ஆணையருக்கு, உரிமைகள் அமைப்பு சட்ட உரிமைகள் கண்காணிப்பகம் (எல்ஆர்ஓ) சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சில விஷயங்களை எதிர்க்க முடியாது; அவை ஒழிக்கப்பட வேண்டும். டெங்கு, கொசு, மலேரியா, கரோனா போன்றவற்றை நாம் எதிர்க்க முடியாது, அவற்றை ஒழிக்க வேண்டும். அதேபோல், சனாதனத்தை (சனாதன தர்மத்தை) எதிர்ப்பதை விட ஒழிக்க வேண்டும்” என்று சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் அமைச்சர் உதயநிதி பேசி உள்ளார்.
இது உதயநிதி ஸ்டாலினின் உரையின் மற்ற உள்ளடக்கங்களைத் தவிர, குற்றம் சாட்டப்பட்ட உதயநிதி ஸ்டாலினின் வெறுப்பு உரையின் ஒரு பகுதியாகும். மதத்தின் அடிப்படையில் பல்வேறு குழுக்களிடையே பகையை வளர்க்கும் நோக்கில் அவரது செயல் உள்ளது. இதுபோன்ற வெறுப்பூட்டும் உரையை படித்தது மட்டுமின்றி, ட்வீட்டிலும் (எக்ஸ்) தனது அறிக்கையை மீண்டும் உறுதி செய்துள்ளார். ,” என்று சட்ட நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.
எல்.ஆர்.ஓ. மற்றும் அதன் தேசிய ஒருங்கிணைப்பாளர் வினய் ஜோஷி சார்பில் வழக்கறிஞர் உமேஷ் சர்மா இதனை அனுப்பி உள்ளார். மேலும் இந்த சட்ட அறிவிப்பு கிடைத்த ஒரு வாரத்திற்குள் இந்த விஷயத்தில் தேவையானதை" செய்யத் தவறினால், உயர் காவலர் மீது அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்குவதாகவும் சட்ட நோட்டீசில் மிரட்டும் வகையில் குறிப்பிடப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டு உள்ளது.