மக்களவை தேர்தல்: வெளியானது திமுக வேட்பாளர் பட்டியல்
21 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார்.
மக்களவை தேர்தல் தேதியை கடந்த வாரம் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. நாடு முழுவதும் உள்ள 543 லோக்சபா தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல் கட்ட தேர்தலிலே தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுவையில் உள்ள ஒரு தொகுதிக்கும் தேர்தல் நடைபெறுகிறது.
இந்த நிலையில் இன்று திமுக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.
- வட சென்னை: கலாநிதி வீராசாமி
- தென் சென்னை: சுமதி என்கிற தமிழச்சி தங்க பாண்டியன்
- மத்திய செனனை : தயாநிதி மாறன் ஸ்ரீபெரும்பதூர்:டி ஆர்பாலு
- அரக்கோணம்: ஜெகத்ரட்சகன்
- வேலூர்: கதிர் ஆனந்த்
- தர்மபுரி: ஆ மணி
- திருவண்ணாமலை: சிஎன் அண்ணாதுரை
- ஆரணி: எம்ஸ் தரணிவேந்தன்
- கள்ளக்குறிச்சி: மலையரசன்
- சேலம்: செல்வகணபதி
- ஈரோடு: கே ஏ பிரகாஷ்
- நீலகிரி : ஆராசா
- கோவை: கணபதி ராஜ்குமார்
- பொள்ளாச்சி: ஈஸ்வரசாமி
- பெரம்பலூர்: அருண் நேரு
- தஞ்சாவூர்: முரசொலி
- தேனி: தங்க தமிழ்செல்வன்
- தென்காசி: ராணி சிவக்குமார்
- தூத்துக்குடி: கனிமொழி
இப்பட்டியலில் புதியவர்கள் 11 பேர், பெண்கள் 3, பட்டதாரிகள் 19 பேர், மருத்துவர்கள் 2, வழக்கறிஞர்கள் 6 பேர் இடம்பெற்றுள்ளனர்