சிவாஜி கணேசன் நினைவு நாள்- நெல்லை காங்கிரஸ் கட்சி சார்பில் மரியாதை

நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் 20 ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.;

Update: 2021-07-21 07:02 GMT

நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் 20 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 20 வது நினைவு தினத்தை முன்னிட்டு நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது .

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில் சிவாஜிகணேசனின் பெருமைகளை நினைவு கூர்ந்தனர் இந்நிகழ்ச்சியில் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு செவாலியே சிவாஜி கணேசன் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் அதனைத் தொடர்ந்து நினைவு கூட்டத்தில் பேசிய அவர் விரைவில் இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சி மலரும் தலைவர் ராகுல் காந்தி பிரதமராக பதவி ஏற்பார் என்றும் பின்னாலிருந்து டெலிபோன் ஒட்டு கேட்க முடியாது என்று தெரிவித்தார் இந்த நிகழ்ச்சியில் ராஜேஷ்முருகன், சொக்கலிங்ககுமார், சிவாஜிபாலச்சந்தர், கண்ணன் மகாராஜன் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News