தமிழக கவர்னர் ரவி அவரது மனைவி சிதம்பரம் நடராஜர் கோவிலில் சாமி தரிசனம்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழக ஆளுநரும் அண்ணாமலை பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.;

Update: 2022-04-18 05:40 GMT

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு தமிழக ஆளுநரும் அண்ணாமலை பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 84 ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள சிதம்பரத்திற்கு வருகை தந்துள்ள தமிழ்நாடு கவர்னர் ரவி மற்றும் அவரது மனைவி ஆகியோர் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். நடராஜர் கோவிலுக்கு வருகை தந்த தமிழக கவர்னர் ரவி அவரது மனைவியை நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் செயலாளர் கார்த்தி தீக்ஷதர் மற்றும் பொது தீட்சிதர்கள் பூரண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்று கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர்.

Tags:    

Similar News