ஒரே ஆண்டில் ரூ.1,161கோடி வருவாய்: பா.ஜ.கட்சிக்கு வந்தது எப்படி?
BJP, Revenue of Rs 1161 crore in a single yearஒரே ஆண்டில் ரூ.1,161கோடி அறியப்படாத வருவாய் பா.ஜ.கட்சிக்கு வந்தது எப்படி? என்ற கேள்வி எழுந்துள்ளது.;
பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரே ஆண்டில் அறியப்படாத வருமானம் ரூ. 1,167 கோடி வந்தது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.
BJP, Revenue of Rs 1161 crore in a single yearஅங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஒவ்வொரு ஆண்டும் தங்களது வருமானம் மற்றும் செலவுகளை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்ய வேண்டும் என்பது விதிமுறையாகும். நாட்டின் ஏழு தேசிய கட்சிகளான பாரதிய ஜனதா, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மேகாலயாவை சேர்ந்த தேசிய மக்கள் கட்சி ஆகியவை கடந்த 2021 22 ஆம் நிதி ஆண்டில் பெற்ற வருவாய் குறித்த விவரம் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதிகாரப்பூர்வ தகவல்களை சுட்டிக்காட்டி இந்த விவரத்தை தேர்தல் சீர்திருத்தங்களுக்கான தன்னார்வ அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி ஏழு தேசிய கட்சிகளும் அறியப்படாத ஆதாரங்கள் மூலம் மொத்தமாக ரூ. 2172 கோடி பெற்று உள்ளன.இது இந்த கட்சிகளின் மொத்த வருவாயில் 66 சதவீதம் ஆகும்.
BJP, Revenue of Rs 1161 crore in a single yearஅதேநேரம் அறியப்படாத ஆதார வருவாயில் 1211 கோடி ரூபாய் அதாவது 83 சதவீதம் தேர்தல் பத்திரங்கள் மூலம் வந்திருக்கிறது. அறியப்படாத ஆதார வருவாயை இந்த கட்சிகள் தங்களின் வருடாந்திர தணிக்கை அறிக்கையில் தெரிவித்து இருக்கின்றன. ஆனால் எங்கிருந்து அந்த வருமானம் வந்தது என்ற விவரத்தை வெளியிடவில்லை. ஆனால் அறியப்படாத ஆதாரத்தில் தேர்தல் பத்திரங்கள், கூப்பன்கள் விற்பனை, நிவாரண நிதி மற்ற வகை வருவாய்கள், தன்னார்வ பங்களிப்புகள் கூட்டங்களின் போது திரட்டப்படும் வருவாய் போன்றவை அடங்கும்.
BJP, Revenue of Rs 1161 crore in a single yearகடந்த நிதி ஆண்டில் தங்களுக்கு ரூ. 1161 கோடி ரூபாய் அறியப்படாத ஆதாரங்கள் மூலம் வந்ததாக பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது. இது மற்ற ஆறு தேசிய கட்சிகளின் அறியப்படாத மொத்த வருவாயை விட ரூ. 150 கோடி அதிகம் ஆகும் .ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட தேசிய கட்சிகளில் பகுஜன் சமாஜ் கட்சியும் அடங்கும் என்றாலும் அறியப்படாத ஆதாரங்கள் மூலம் தாங்கள் எந்த நன்கொடையும் பெறவில்லை என்று அந்த கட்சி தெரிவித்துவிட்டது.
BJP, Revenue of Rs 1161 crore in a single yearகட்சிகளுக்கு ரூ. 20,000 க்கு குறைவாக நிதி வழங்கும் தனி நபர்கள் அல்லது அமைப்புகள் மற்றும் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளிப்போர் குறித்த விவரத்தை தற்போது அரசியல் கட்சிகள் தெரிவிக்க தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
BJP, Revenue of Rs 1161 crore in a single yearஆனாலும் ஒரே ஆண்டில் மத்தியில் ஆளுங்கட்சியான பாரதிய ஜனதாவிற்கு ரூ. 1,161 கோடி அறியப்படாத வருவாய் வந்தது எப்படி என்பது பெரும் கேள்வியாக தொக்கி நிற்கிறது.