அமித்ஷாவிற்கு ஆதரவாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு பின்னடைவு

அமித்ஷாவிற்கு ஆதரவாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

Update: 2024-02-23 17:05 GMT

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி ராகுல் காந்தி தாக்கல் செய்திருந்த மனுவை ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, கடந்த 2018ம் ஆண்டு மார்ச் 18ம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியிருந்ததாக பாஜக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இது குறித்து பாஜக பிரமுகர் விஜய் மிஸ்ரா, வழக்கு தொடர்ந்திருந்தார். ஏற்கெனவே, அவதூறு வழக்கில் சிறை தண்டனை பெற்ற ராகுல் காந்தி தனது எம்பி பதவியை இழந்திருந்தார். இந்நிலையில், இரண்டாவது முறையாக இவர் மீது அவதூறு வழக்கு பதிவாகியிருந்தது பெரும் விவாதங்களை ஏற்படுத்தியது.

இந்த வழக்கு குறித்து விஜய் மிஸ்ரா கூறுகையில், "கடந்த 2018ம் ஆண்டு நான் பாஜக மாவட்ட துணைத் தலைவராக இருந்தேன். பெங்களூருவில் நடந்த கூட்டம் ஒன்றில் அமித் ஷாவை கொலைகாரர் என்று குற்றம்சாட்டி ராகுல் காந்தி பேசியிருந்தார். இந்த குற்றச்சாட்டினை கேட்ட போது, பாஜக கட்சிக்காரனாக மிகவும் வேதனை அடைந்தேன். எனவேதான் வழக்கு தொடர்ந்தேன்" என்று கூறியுள்ளார்.

இந்த வழக்கின் விசாரணை கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் உத்தரப் பிரதேசத்தின் சுல்தான்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணைக்கு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று ராகுல் காந்திக்கு சம்மனும் அனுப்பப்பட்டிருந்தது. பாரத் ஜோடோ நியாய யாத்திரையில் இருந்த ராகுல் காந்தி, நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் கோரினார். இரு தரப்பின் வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து அவர் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில், இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தார்.

இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது, அப்போது நீதிபதிகள், "பாஜக தலைமை, பொய்யர்களால் ஆனது என்றும், அதன் தலைவர்களை கொலை குற்றவாளிகள் என்றும் ராகுல் விமர்சித்திருக்கிறார். இது நிச்சயமாக அவதூறுதான்" என்று கூறியிருந்தனர். இதனையடுத்து, மனுவை அவர்கள் தள்ளுபடி செய்தனர். இது ராகுல் காந்திக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறதுமேலே குறிப்பிட்டத்தை போல, ஏற்கெனவே மோடி சமூகம் குறித்து அவதூறாக பேசியதாக தொரடப்பட்ட வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என்று குஜராத் உயர்நீதிமன்றம் அறிவித்திருந்தது. எனவே அவரது எம்பி பதவியும் பறிபோனது.

பின்னர் இந்த தீர்ப்புக்கு எதிராக அவர் உச்சநீதிமன்றத்தை நாடி தடை உத்தரவை பெற்ற பின்னர்தான் அவரது எம்பி பதவி மீண்டும் கிடைத்தது. எனவே அமித்ஷாவை அவதூறாக பேசிய வழக்கில், அவருடைய எம்பி பதவி பறிபோய்விடக்கூடாது என்பதில் காங்கிரஸ் கவனமாக இருக்கிறது. இப்படி இருக்கையில், ஜார்க்கண்ட் நீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்திருப்பது காங்கிரஸுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News