காங்கிரஸ் கட்சிக்கு குட்பை சொன்ன பஞ்சாப் மூத்த தலைவர் சுனில் ஜாகர்

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக பஞ்சாப் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சுனில் ஜாகர் தெரிவித்தார்.

Update: 2022-05-15 11:15 GMT

பஞ்சாப் காங்கிரஸ் மூத்த தலைவர் சுனில் ஜாகர்

பஞ்சாப் முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியைபஞ்சாப் காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுனில் ஜாகர் ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அம்மாநில காங்கிரஸார் சுனில் ஜாகருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி காங்கிரஸின் தலைமைக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர்.

இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி சுனில் ஜாகருக்குகட்சி  நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் சுனில் ஜாகர் எந்த விளக்கத்தையும் குழு முன் சமர்ப்பிக்கவில்லை.

இதனையடுத்து காங்கிரஸ் ஒழுங்குமுறை குழு, சுனில் ஜாகரரை கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்து நீக்குவதாக அறிவித்தது. காங்கிரஸ் கட்சியின் இந்த நடவடிக்கைக்கு சுனில் ஜாகருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. ஆனால் அமைதியாக இருந்து வந்தார். இந்நிலையில் பேஸ்புக் லைவ்வில் பேசிய சுனில் ஜாகர், காங்கிரஸூக்கு குட் லக் மற்றும் குட்பை. பஞ்சாப், சீக்கியர்கள் மற்றும் சீக்கியர்கள் மீது களங்கம் மற்றும் இந்துக்களை அவமதித்து அவமானப்படுத்தும் இப்படிப்பட்ட தலைவர்கள் காங்கிரஸில் இருப்பதில் ஏதாவது பிரயோஜனம் உண்டா?

என்னை அனைத்து பதவிகளில் இருந்து நீக்குவதாக முடிவு எடுத்த நேரத்தில், நான் கட்சியின் எந்த பதவியிலும் இல்லை. இதுவே காங்கிரஸ் கட்சிக்கு கேடு. காங்கிரஸ் சிந்தனை முகாம் நடத்துவதற்கு பதிலாக கவலை முகாம் நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்

Tags:    

Similar News