பெட்ரோல் வரி குறைப்பு: மத்திய அரசு மீது தமிழக நிதியமைச்சர் பாய்ச்சல்
பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை மத்திய அரசு குறைத்துள்ள நிலையில், இது குறித்து தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.;
மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான உற்பத்திய வரியை, நேற்று அதிரடியாக குறைத்தது. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 9.50 காசு, டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன், கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைத்தபோது, சில மாநிலங்கள் உள்ளூர் வரியை குறைக்கவில்லை; எனவே, இப்போதாவது அவற்றை குறைத்து மக்களுக்கு உதவ வேண்டுமென்று மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது.
இச்சூழலில், மத்திய அரசின் கருத்து குறித்து, தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து, டிவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது: மாநிலங்களின் கருத்தை கேட்காமல் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியது. 2014 ஆம் ஆண்டில் இருந்து பெட்ரோல் ரூ. 23 (250%), டீசல் ரூ.29 (900 %) என மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
தற்போது உயர்த்தப்பட்ட விலையில் இருந்து 50 சதவீதம் குறைத்துவிட்டு மாநிலங்களை குறைக்கச் சொல்லி மத்திய அரசு வலியுறுத்துகிறது. இதுதான் கூட்டாட்சியா?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.