சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரம்

சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளார்.;

Update: 2024-03-03 17:23 GMT

பிரதமர் மோடி.

பிரதமர் நரேந்திர மோடி நாளை முதல் மார்ச் 6-ந் தேதி வரை தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார். கல்பாக்கத்தில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முன்மாதிரி வேக ஈனுலை மையப்பகுதியில் கோர் லோடிங் தொடக்கப்பணியைப் பார்வையிடும் பிரதமர் மோடி, சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி 2024 மார்ச் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை தெலுங்கானா, தமிழ்நாடு, ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார். மார்ச் 4 அன்று காலை 10.30 மணியளவில், தெலுங்கானா மாநிலம் அதிலாபாத்தில் ரூ.56,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதன்பிறகு பிற்பகல் 3.30 மணியளவில் பிரதமர் தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் உள்ள பாவினி வருகை தருகிறார். பின்னர் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி. மைதானத்தில் நடைபெறும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

மார்ச் 5 அன்று காலை 10 மணியளவில் ஹைதராபாத்தில் சிவில் விமானப் போக்குவரத்து ஆராய்ச்சி அமைப்பின் (CARO) மையத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். காலை 11 மணியளவில், தெலங்கானா மாநிலம் சங்காரெட்டியில் ரூ. 6,800 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பிற்பகல் 3.30 மணியளவில், ஒடிசா மாநிலம் ஜஜ்பூரில் உள்ள சண்டிகோலில் ரூ.19,600 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

மார்ச் 6 அன்று காலை 10.15 மணியளவில், கொல்கத்தாவில் ரூ.15,400 கோடி மதிப்பிலான பல்வேறு போக்குவரத்து இணைப்புத் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டுகிறார். அதன்பிறகு, பிற்பகல் 3.30 மணியளவில், பீகார் மாநிலம் பெட்டியாவில் ரூ.8,700 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

Tags:    

Similar News