கிராமங்களிலும் குழாய் மூலம் சமையல் எரிவாயு: பா.ஜ. தேர்தல் அறிக்கையில் தகவல்
கிராமங்களிலும் குழாய் மூலம் சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படும் என பா.ஜ. தேர்தல் அறிக்கையில் உறுதி அளிக்கப்பட்டு உள்ளது.;
கிராமங்களிலும் சமையல் எரிவாயு குழாய் மூலம் வினியோகம் செய்யப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. மேலும் ஆதார் அடையாள அட்டை போலவே ஒரே நாடு ஒரே வாக்காளர் அடையாள அட்டை திட்டமும் கொண்டு வரப்பட உள்ளது.
பாஜகவின் லோக்சபா தேர்தல் அறிக்கை 2024 வெளியிடப்பட்டு உள்ளது. டெல்லியில் உள்ள கட்சி தலைமையகத்தில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் வெளியிடப்பட்டு உள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இந்த நிகழ்வில் பங்கேற்றனர். மக்களவைத் தேர்தலுக்கான கட்சியின் 'சங்கல்ப் பத்ரா' பிரதமர் மோடி முன்னிலையில் வெளியிடப்பட்டு உள்ளது. பாஜக தேர்தல் அறிக்கை குழு தலைவர் ராஜ்நாத் சிங் தலைமையில் அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது. ஒருங்கிணைப்பாளர் நிர்மலா சீதாராமன், இணை ஒருங்கிணைப்பாளர் பியூஸ் கோயல் இந்த குழுவில் பங்கேற்றனர். 27 பேர் கொண்ட குழு இந்த தேர்தல் அறிக்கையை தயார் செய்துள்ளது .
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம். இலவச ரேஷன் திட்டம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தொடரும். மக்களின் வாழ்வை மேம்படுத்துவதே மோடியின் கேரண்டி.
2036ம் ஆண்டு இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். 2025ம் ஆண்டு பழங்குடிகள் ஆண்டாக கொண்டாடப்படும்.நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் பொது வாக்காளர் பட்டியல் முறை அமல்படுத்தப்படும் மானிய விலையில் கேஸ் சிலிண்டர் கொடுத்து வருகிறோம், அடுத்த கட்டமாக அனைத்து கிராமங்களுக்கும் பைப் லைன் மூலம் கேஸ் விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ளோம் புதிய மின் உற்பத்தி மூலம் அனைத்து குடும்பங்களுக்கும் மின்சாரம் விநியோகிக்க உள்ளோம் 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூ. 5 லட்சம் மருத்துவக் காப்பீடு வழங்கப்படும்
இது போக வடகிழக்கு மாநிலங்களுக்கு புல்லட் ரயில் சேவை. படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும். நாடு முழுவதும் மாணவர்களுக்கு நிரந்தர அடையாள எண். தொன்மையான மொழி தமிழை உலகளவில் கொண்டு செல்ல நடவடிக்கை. தமிழ் மொழி பாதுகாப்பில் தனிக்கவனம் செலுத்தப்படும் கிராமங்களுக்கு பைப் லைன் மூலம் எரிவாயு விநியோகம் மெட்ரோ ரயில் சேவைகள் வந்தே பாரத் மெட்ரோ சேவைகளாக தரம் உயர்த்தப்படும் என்று பாஜக அறிவித்துள்ளது.