புதுச்சேரியில் பிரான்ஸ் அதிபர் தேர்தலுக்கான 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு

புதுச்சேரியில் பிரெஞ்ச் குடியுரிமை பெற்றவர்கள் அதிகம் வசித்து வருகின்றனர்.அதிபர் தேர்தலுக்கான 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு;

Update: 2022-04-24 07:19 GMT

புதுச்சேரியில் பிரெஞ்ச் குடியுரிமை பெற்றவர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். தற்போது பிரெஞ்ச் நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெறும் நிலையில், புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு குடியுரிமை பெற்ற 4,500க்கும் மேற்பட்டோர் வாக்களிக்கவுள்ளனர்.

புதுச்சேரியில் பிரான்ஸ் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் முதற்கட்டமாக கடந்த 10 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த நிலையில், இரண்டாவது கட்டமாக இன்று புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இவர்கள் வாக்களிக்க வசதியாக புதுச்சேரியில் இரு இடங்களிலும், காரைக்காலில் ஒரு இடத்திலும் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இன்று காலை 8 மணியளவில் தேர்தல் தொடங்கியுள்ள நிலையில், புதுச்சேரியில் பிரெஞ்சு குடியுரிமை பெற்ற 4,500க்கும் மேற்பட்டோர் வாக்களிக்கவுள்ளனர். அவர்கள் பிரெஞ்ச் நாட்டை சேர்ந்தவர்கள் என்பதற்காக அடையாள அட்டையை சரிபார்த்த பின்னரே வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். 

Tags:    

Similar News