அதிமுக பொதுக்குழு நடத்த அனுமதி: உயர்நீதிமன்றம் தீர்ப்பு

அதிமுக., பொதுக்குழுவை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

Update: 2022-07-11 03:45 GMT

பைல் படம்.

அதிமுக., பொதுக்குழுவை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. இதன் மூலம் ஒற்றை தலைமையாக பழனிசாமி வருவதற்கு இருந்த தடை நீங்கி உள்ளது. இதன் மூலம் சற்று நேரத்தில் அதிமுக பொதுக்குழு துவங்குவது உறுதியாகி உள்ளது.

அதிமுக.,வில் தற்போதுள்ள இரட்டை தலைமையை ரத்து செய்து, ஒற்றைத் தலைமையை அமல்படுத்தி, கட்சியின் பொதுச்செயலர் ஆவதற்காக, முன்னாள் முதல்வர் பழனிசாமி காய்களை நகர்த்தி வருகிறார். அவருக்கு 95 சதவீத நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.இதற்கு, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் சென்னையில் பொதுக்குழுவை கூட்டி, தற்காலிக பொதுச் செயலராக பழனிசாமியை தேர்வு செய்ய முடிவு செய்து, பொதுக்குழுக் கூட்டத்திற்கு, அவரது ஆதரவு தரப்பு ஏற்பாடு செய்துள்ளது.

இந்த பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்தார். பொதுக்குழு உறுப்பினரான வைரமுத்து என்பவரும், தடை கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு, நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்தது. கடந்த இரு தினங்களாக, இரு தரப்பு வழக்கறிஞர்களும் தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைத்தனர். இந்த வழக்கில், இன்று(ஜூலை11) காலை 9:00 மணிக்கு உத்தரவு பிறப்பிப்பதாக, நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அறிவித்திருந்தார்.

இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, அதிமுக., பொதுக்குழு தொடர்பான விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக்கூறி, சட்டப்படி அதிமுக., பொதுக்குழுவை நடத்தி கொள்வதற்கு அனுமதி வழங்கினார். இந்த தீர்ப்பு பழனிசாமி தரப்புக்கு சாதகமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News