அருண் நேருவிற்காக பெரம்பலூர் தொகுதி தி.மு.க.செயல்வீரர்கள் கூட்டம்

அருண் நேருவிற்காக பெரம்பலூர் தொகுதி தி.மு.க.செயல்வீரர்கள் கூட்டம் முசிறியில் 23ம் தேதி நடைபெற உள்ளது.

Update: 2024-03-19 10:37 GMT

தந்தை நேருவுடன் மகன் அருண்நேரு.

முசிறியில் வருகிற 23ஆம் தேதி பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக செயல்வீரர்கள்  கூட்டம் நடைபெற உள்ளது.

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் செயல் வீரர்கள் கூட்டம் வருகிற 23ஆம் தேதி காலை 9 மணிக்கு திருச்சி மாவட்டம் முசிறி வாசன் மஹாலில் நடக்க உள்ளது. கூட்டத்தில் திமுக முதன்மை செயலாளரும் அமைச்சருமான கே.என்.நேரு கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி பேசுகிறார்.

இதில் பெரம்பலூர், லால்குடி, முசிறி, மண்ணச்சநல்லூர், துறையூர் குளித்தலை ஆகிய சட்டசபை தொகுதி திமுக மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் முன்னாள் எம்பிக்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் மற்றும் கரூர் பெரம்பலூர் மாவட்ட திமுக செயலாளர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக முதன்மை செயலாளர் நேருவின் மகன் அருண் நேரு போட்டியிடுவார் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவரது வெற்றிக்கு பாடுபடுவதற்காக தான் இந்த கூட்டம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரை கடந்த நாடாளுமன்ற  தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளில் ஒன்றாக இருந்த இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவன தலைவர் பாரிவேந்தர் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

ஆனால் அவர் தற்போது திமுக கூட்டணியில் இருந்து விலகி பாஜக கூட்டணியில் அதே போட்டியிட உள்ளார். அவரை எப்படியும் தோற்கடித்தே தீரவேண்டும் என்பதில் திமுக உறுதியாக இருக்கிறது. அதன் காரணமாக இந்த சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News