நாடாளுமன்ற தேர்தல்: தி.மு.க.விடம் 3 தொகுதிகள் கேட்கும் திருமாவளவன்

நாடாளுமன்ற தேர்தலில் தங்களுக்கு தி.மு.க.விடம் 3 தொகுதிகள் ஒதுக்கவேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கேட்டு உள்ளது.

Update: 2024-02-01 14:07 GMT

தொல். திருமாவளவன்.

தமிழகத்தில் நாடாளுமன்ற  தேர்தலுக்கு தி.மு.க. தீவிரமாக தயாராகி வருகிறது. ஏற்கனவே மண்டல பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுவிட்டனர். அதேபோல் பூத் கமிட்டி நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டுவிட்டனர். பூத் கமிட்டி சார்பாக வாக்காளர்களை சந்திக்கும் பணிகளை தி.மு.க. தொடங்கிவிட்டது.

நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு தொடர்பாக பேச்சுவார்த்தை செய்ய குழு அமைத்து பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதேபோல் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் நாடாளுமன்ற தேர்தலுக்கான 'தேர்தல் அறிக்கை தயாரிப்பு' குழு அறிவிக்கப்பட்டு உள்ளது.

2024 லோக்சபா தேர்தலுக்கு காங்கிரசுக்கு கடந்த முறை போல 10 இடங்களை கொடுக்காமல் 7 இடங்களுக்குள் சுருக்கும் முடிவில் தி.மு.க. உள்ளதாக கூறப்படுகிறது. அப்படிப்பட்ட நேரத்தில் சமீபத்தில் காங்கிரசின் தோல்வி. திமுகவிற்கு கூட்டணி ரீதியாக அதிக பவரை கொடுத்துள்ளதாம்.

லோக்சபா தேர்தலுக்காக சிங்கிள் பிளான் ஒன்றை திமுக களமிறக்க உள்ளதாம். அதாவது ஒற்றை இலக்க பிளான். அதன்படி காங்கிரஸ் கட்சிக்கு கடந்த முறை கொடுத்தது போல 10 தொகுதி தரப்படாது. ஒற்றை இலக்கத்தில் 8 தொகுதிகள் வரை மட்டுமே கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இன்னொரு பக்கம் விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 1 இடங்கள் மட்டுமே கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் இவர்களுக்கு தலா 2 தொகுதிகள் வழங்கப்பட்டன. இந்த முறை 2 இடங்கள் வழங்கப்படாது. மாறாக ஒரே ஒரு தொகுதி மட்டுமே வழங்கப்படும். காங்கிரஸ் கட்சிக்கு திமுகவின் ராஜ்ய சபா இடங்களில் ஒன்று வழங்கப்படும். மற்றபடி 25 - 30 இடங்களில் திமுக போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உங்கள் கட்சியில் தேர்வாக உள்ளவர்களின் லிஸ்டை தயார் செய்யுங்கள் என்று தகவலை காங்கிரஸ் கட்சிக்கு திமுக தெரிவிக்க உள்ளதாம்.

லோக்சபா தேர்தல் 2024ல் கூட்டணி வைப்பதற்கு திமுகவிடம் முக்கியமான சில கோரிக்கைகளை விசிக கட்சி வைத்து வருகிறது. அதன்படி இந்த முறை 3 தொகுதிகள் வேண்டும் என்று திமுகவிடம் விசிக கேட்க உள்ளதாம்.

அதேபோல் திமுகவிடம் 3ல் 1 தனி தொகுதி, 2 பொதுத்தொகுதி வேண்டும் என்றும் விசிக கேட்டு உள்ளது. அதோடு மூன்றிலும் பானை சின்னத்தில் மட்டுமே போட்டியிடுவோம் என்றும் அந்த கட்சி கோரிக்கை வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. விசிகவை எப்படியாவது கூட்டணிக்குள் இழுக்க எடப்பாடி பழனிசாமி முயன்று வருகிறார். அதை பயன்படுத்தி திமுகவிடம் இந்த டிமாண்டை வைக்க வி.சி.க. முடிவு செய்துள்ளதாம். 

லோக்சபா தேர்தலை முன்னிட்டு திமுகவிடம் 21 தொகுதிகளை காங்கிரஸ் கேட்டுள்ளது. ஏற்கனவே வென்ற 9 தொகுதிகள் + 12 தொகுதிகள் என்று கூடுதலாக கேட்டுள்ளது. அதன்படி ஏற்கனவே வென்ற தொகுதிகளான, 1. திருவள்ளூர் (SC) 2. கிருஷ்ணகிரி 3. ஆரணி 4. கரூர் 5. திருச்சிராப்பள்ளி 6. சிவகங்கை 7. தேனி 8. விருதுநகர் 9. கன்னியாகுமரி அதேபோல் இப்போது திமுக மற்றும் திமுக கூட்டணி இருக்கும், 1. திருநெல்வேலி 2. ராமநாதபுரம் 3. தென்காசி (SC) 4. திண்டுக்கல் 5. திருவண்ணாமலை 6. தஞ்சாவூர் 7. மயிலாடுதுறை 8. பெரம்பலூர் 9. கள்ளக்குறிச்சி 10. காஞ்சிபுரம் (SC) 11. தென் சென்னை 12. அரக்கோணம்.

இதில் தென் சென்னை தமிழச்சி தங்கபாண்டியன் இருக்கும் தொகுதி, தஞ்சாவூர் எஸ்எஸ் பழனிமாணிக்கம் இருக்கும் தொகுதி, கள்ளக்குறிச்சி பொன்முடி மகன் கவுதம் சிகாமணி இருக்கும் தொகுதி. ராமநாதபுரம் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் நவாஸ் கனி இருக்கும் தொகுதி ஆகும். இந்த 4 முக்கியமான தொகுதிகளை காங்கிரஸ் இந்த முறை குறி வைத்துள்ளது.

Tags:    

Similar News