நீதிமன்றம் மூலம் சாதிக்க நினைக்கும் ஓபிஎஸ்: உயர்நீதிமன்ற நீதிபதி கண்டனம்

கட்சியினர் நம்பிக்கையை பெற முடியாதவர்கள் நீதிமன்றங்களை கருவியாக பயன்படுத்துகின்றனர் என உயர்நீதிமன்ற நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2022-07-11 06:11 GMT

கட்சி உறுப்பினர் நம்பிக்கையை பெற முடியாதவர்கள் நீதிமன்றங்களை ஒரு கருவியாக பயன்படுத்துகின்றனர் என்று ஓபிஎஸ்க்கு உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் நீதிமன்றத்தின் மூலமாக சாதிக்க முயற்சிக்கிறார் என கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

ஜனநாயகத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பம்தான் மேலோங்கி இருக்கும். ஒருங்கிணைப்பாளர் என்பவர் கட்சிநலன், வளர்ச்சிக்கு ஏற்றவாறு உறுப்பினர்களை சமாதானம் செய்ய வேண்டும். பொதுக்குழுவில் தீர்வு கிடைக்காவிடில் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகலாம். சிறந்த நிர்வாகத்துக்காக கட்சி விதிகளை வகுக்கும் விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடாது. சட்டவிதிகளுக்கு உட்பட்டு நடத்தவில்லை எனில் உச்சநீதிமன்றம்தான் பரிசீலிக்க முடியும் என உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். எடப்பாடி பழனிசாமியை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுக நிரந்தர பொதுச்செயலாளர் பதவிக்கு 4 மாதங்களில் தேர்தல் நடத்தவும் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். துணைப் பொதுச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடத்தி நிர்வாகிகளை தேர்வு செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறது.

Tags:    

Similar News