எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி: மக்களவை நாளை மறுநாள் வரை ஒத்திவைப்பு
மக்களவையில் 2வது நாளாக வேளாண் சட்டம், பெகாசஸ் விவகாரம் உள்ளிட்டவற்றை முன் வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால், மக்களவை நாளை மறுநாள் காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மக்களவையில் 2வது நாளாக வேளாண் சட்டம், பெகாசஸ் விவகாரம் உள்ளிட்டவற்றை முன் வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. ஆகஸ்ட் 13ந் தேதி வரை நடைபெற உள்ளது. கூட்டத்தொடர் இன்று 2வது நாளாக கூடியது. எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் நாளை மறுநாள் காலை 11 மணி வரைவரை அவை ஒத்திவைக்கப்பட்டது.