மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்காக 2வது அமர்வு இன்று தொடங்குகிறது
மானியக் கோரிக்கை மீதான 2ஆவது அமர்வு- விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றை எழுப்ப எதிர்க்கட்சியான அதிமுக திட்டமிட்டுள்ளது.
மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்காக கூட்டத்தொடரின் 2ஆவது அமர்வு இன்று தொடங்குகிறது
சட்டப்பேரவையில் கடந்த மாதம் 18ஆம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக துறை வாரியான மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்காக கூட்டத்தொடரின் 2ஆவது அமர்வு இன்று தொடங்கி மே 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளில் நீர்வளத்துறை மீதும், 7ஆம் தேதி நகராட்சி நிர்வாகம் துறை மீதான விவாதமும் நடைபெறவுள்ளது. இதில் சொத்துவரி உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம்-ஒழுங்கு, மகளிர் மாத உதவித் தொகை, பழைய ஓய்வூதிய ரத்து உள்ளிட்டவற்றை எழுப்ப பிரதான எதிர்க்கட்சியான அதிமுக திட்டமிட்டுள்ளது.