நாளைக்கு பணிக்கு வராவிட்டால் ஊதியம் இல்லை!

ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் நாளைக்கு பணிக்கு வராவிட்டால் ஊதியம் இல்லை என தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவித்துள்ளார்.;

Update: 2024-02-14 05:00 GMT

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில் நாளை ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டமும், அதை தொடர்ந்து பிப்ரவரி 26ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என ஜாக்டோ - ஜியோ அறிவித்திருந்தது. இதையடுத்து சென்னை தலைமைச் செயலகத்தில் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களுடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, முத்துசாமி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று போராட்டத்தில் ஈடுபட்டு அலுவலகம் வராத அரசு ஊழியர்களுக்கு அன்றைய நாளுக்கான ஊதியம் வழங்கப்படாது என்று தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார். மேலும், அரசு ஊழியர்களின் வருகை நிலை குறித்து மனிதவள மேலாண்மை துறைக்கு சம்பந்தப்பட்ட அலுவலக நிர்வாகி காலை 10.15 மணிக்குள் தெரியப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News