ஆதரவு தர்றேன்.. ஆனா நான் தான் பிரதமர்! செக் வைக்கும் நிதிஷ்குமார்..!
அதனால் நிதிஷ்குமாரின் ஆதரவு பாஜகவுக்கு கிடைக்க வேண்டுமென்றால் பிரதமர் பதவியை விட்டுத் தர வேண்டும் என அந்த கட்சி கேட்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தனக்கு பிரதமர் பதவி வேண்டும் என நிதிஷ் குமார் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பாஜக மற்றும் காங்கிரஸ் இரண்டு கூட்டணிகளும் அதிர்ச்சியடைந்துள்ளன.
மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இப்போது வரை பாஜக கூட்டணி கிட்டத்தட்ட 289 இடங்களிலும் காங்கிரஸ் கூட்டணி 236 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றன. இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் எத்தனை தொகுதிகள் பெற்றிருக்கின்றன என்பதைப் பார்ப்போம்.
கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல், கடந்த ஜூன் 1ம் தேதி நிறைவடைந்தது. இந்நிலையில், இன்று ஜூன் 4ம் தேதி இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை முதலே தொடங்கி நடைபெற்று வருகிறது.
குஜராத் மாநிலத்தின் சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வானதாக அறிவிக்கப்பட்டார். மீதமுள்ள 542 தொகுதிகளில் எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பாஜகவை வீழ்த்தி மாநில கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என மிகத் தீவிரமாக முனைப்பு காட்டி வருகின்றன.
காங்கிரஸ் கூட்டணியில் இப்போது வரை 236 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. பாஜக கூட்டணியில் இருக்கும் சில கட்சிகளிடம் ஆதரவு கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது காங்கிரஸ் கட்சி. இதனால் சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் இருவரிடமும் தனித்தனியாக பேசியிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
நிதிஷ்குமாரிடம் பேசும்போது அவர் தனக்கு பிரதமர் பதவி வேண்டும் என்கிற குண்டைத் தூக்கி போட்டிருப்பதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியிடம் மட்டுமல்ல, பாஜக ஆதரவு கேட்டு வந்தாலும் அவர்களிடமும் இதே நிபந்தனைதான் என்று இப்போது தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே நிதிஷ்குமாருக்கும் மோடிக்கும் ஆகாது. சந்திரபாபு நாயுடுவும் மோடியை கடுமையாக எதிர்ப்பவர். இதனால் மோடி பிரதமர் ஆவது இப்போதைக்கு உறுதியாக வாய்ப்பில்லை என்பது தெரிகிறது.
அதனால் நிதிஷ்குமாரின் ஆதரவு பாஜகவுக்கு கிடைக்க வேண்டுமென்றால் பிரதமர் பதவியை விட்டுத் தர வேண்டும் என அந்த கட்சி கேட்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
நாம் இப்போது ஒவ்வொரு கட்சியும் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கின்றன என்பதைக் காண்போம்.
- பாஜக - 192 இடங்களில் முன்னிலை 48 இடங்களில் வெற்றி
- காங்கிரஸ் - 82 இடங்களில் முன்னிலை 16 இடங்களில் வெற்றி
- சமாஜ்வாடி - 35 இடங்களில் முன்னிலை
- திரிணாமூல் காங்கிரஸ் - 31 இடங்களில் முன்னிலை
- திமுக - 21 இடங்களில் முன்னிலை
- தெலுங்கு தேசம் - 16 இடங்களில் முன்னிலை
- ஐஜத - 14 இடங்களில் முன்னிலை
- சிவசேனா (உத்தவ்) - 10 இடங்களில் முன்னிலை
- தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) - 8 இடங்களில் முன்னிலை
- ராஷ்ட்ரிய ஜனதா தளம் - 5 இடங்களில் முன்னிலை
- லோக் ஜனசக்தி கட்சி - 5 இடங்களில் முன்னிலை
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 5 இடங்களில் முன்னிலை
- சிவசேனா - எஸ்ஹெச்எஸ் - 5 இடங்களில் முன்னிலை
- யுவஜனா ஸ்ரமிகா ரைத்து காங்கிரஸ் கட்சி - 4 இடங்களில் முன்னிலை
- இந்திய கம்யூனிஸ்ட் - 3 இடங்களில் முன்னிலை
- இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - 3 இடங்களில் முன்னிலை
- ஆம் ஆத்மி - 3 இடங்களில் முன்னிலை
- ஜனசேனா - 2 இடங்களில் முன்னிலை
- லெனின் மார்க்சிஸ்ட் - 2 இடங்களில் முன்னிலை
- மதசார்பற்ற ஜனதா தளம் - 2 இடங்களில் முன்னிலை
- பிஜேடி - 2 இடங்களில் முன்னிலை
- விசிக - 2 இடங்களில் முன்னிலை
- ராஷ்ட்ரிய லோக் தளம் - 2 இடங்களில் முன்னிலை
- ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - 2 இடங்களில் முன்னிலை
- ஜம்மு காஷ்மீர் தேசிய கட்சி - 2 இடங்களில் முன்னிலை
- மதிமுக - 1 இடங்களில் முன்னிலை
- தேமுதிக - 1 இடங்களில் முன்னிலை
- பாமக - 1 இடங்களில் முன்னிலை