7 தமிழர்கள் மற்றும் 10 ஆண்டுகள் சிறைதண்டனை கழித்த முஸ்லிம் ஆயுள் சிறைக்கைதிகள் விடுதலை செய்ய வேண்டும்-அமைச்சரிடம் மனு

Update: 2021-06-04 15:12 GMT

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்.

28 ஆண்டுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வரும் 7 தமிழர்கள் உட்பட 10 ஆண்டுகள் சிறைவாசம் கழிந்த ஆயுள் சிறைவாசிகளையும் குறிப்பாக சிறுபான்மை இஸ்லாமிய சிறைவாசிகளையும் கருணையின் அடிப்படையிலும், நீதியின் அடிப்படையிலும், பாரபட்சம் பாராமல் தமிழக அரசு அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழக சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலை துறை அமைச்சர் எஸ்.ரகுபதி அவர்களை எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

இச்சந்திப்பின் போது, எஸ்.டி.பி.ஐ கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் சலாஹுதீன், நெல்லை மாவட்ட துணைத்தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி ஆகியோர் உடனிருந்தனர்.

Similar News