திமுக தேர்தல் அறிக்கை: திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார்

சென்னையில் தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் வெளியிட்டார்.;

Update: 2024-03-20 05:51 GMT

திமுக தேர்தல் அறிக்கையை வெளியிடும் திமுக தலைவர் ஸ்டாலின் 

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், எம்.பி.யும், ஸ்டாலினின் சகோதரியுமான கனிமொழி உள்ளிட்ட கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

மேலும், வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலையும் அக்கட்சி அறிவித்துள்ளது.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து, நீட் தேர்வுக்கு தடை ஆகியவை திமுக தேர்தல் அறிக்கையில் கூறிய சில வாக்குறுதிகள்.

விரைவில் லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், இது குறித்த அறிவிப்பைத் தேர்தல் ஆணையம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. மொத்தம் 7 கட்டமாக லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

கட்சி அறிக்கையை வெளியிட்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், “தேர்தலுக்கு முன் தேர்தல் அறிக்கையை வெளியிடுவதும், நாங்கள் சொல்வதை தொடர்ந்து செய்வதும் திமுக தான், இதைத்தான் தலைவர்கள் கற்றுக் கொடுத்தார்கள். தமிழகத்தின் முன்னேற்றம் இந்தியா முழுவதும் கொண்டு செல்லப்படும்.

மேலும், தனது சகோதரி கனிமொழியைப் பாராட்டிய மு.க.ஸ்டாலின், “ஒவ்வொரு மாவட்டத்துக்குமான திட்டங்களை மையப்படுத்தி, அருமையான அறிக்கையை கனிமொழி உருவாக்கியுள்ளார்” என்றார்.

சொன்னதை செய்வோம் செய்வதை செய்வோம் என்ற கருணாநிதியின் அளித்துள்ள உறுதிமொழி ..இது உறுதிமொழி மட்டும் அல்ல எங்களுக்கு வழிகாட்டு நெறிமுறை.

அந்த வகையில், 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க முடிவு செய்யப்படது. கனிமொழி தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரை சந்தித்துஅவர்களின் கருத்துகக்ளை முழுமையாக கேட்டறிந்து அதையெல்லாம் செயல்படுத்தக்கூடிய தி\ட்டங்களாக மாற்றி ஒப்படைத்துள்ளார்கள். எனவே இது திமுக தேர்தல் அறிக்கை மட்டும் இல்லை, தமிழ மக்கள் அறிக்கையாக அமைந்துள்ளது என கூறினார்

தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்

  • மாநிலங்கள் சுயாட்சி பெறும் வகையில் சட்டம் திருத்தப்படும்
  • முதல்வரிடம் ஆலோசனை கேட்டு கவர்னர் நியமனம் கவர்னர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கும் 361வது பிரிவு நீக்கம்
  • சென்னையில் உச்சநீதிமன்ற கிளை
  • புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து
  • மத்திய அரசு பணிகளுக்கு தமிழ் மொழியில் தேர்வு, நுழைவுத்தேர்வு
  • அனைத்து மாநில மொழி வளர்ச்சிக்கும் சம அளவு நிதி
  • திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்
  • இலங்கை தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை
  • ரயில்வேக்கு தனி பட்ஜெட்
  • புதிய கல்விக்கொள்கை ரத்து செய்யப்படும்
  • மக்களவை, சட்டசபை 33 சதவீத இட ஒதுக்கீடு உடனடியாக அமல்
  • நாடு முழுவதும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத்திட்டம்
  • இந்தியா முழுவதும் உள்ள குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை
  • தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு
  • மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.10 லட்சம் வட்டியில்லா கடன்
  • தொழிலாளர் விரோத சட்டங்கள் மறு ஆய்வு
  • தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றம்
  • வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகைக்கு இல்லாத போது விதிக்கப்படும் அபராதம் ரத்து
  • ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்
  • ஜிஎஸ்டி சட்டத்தில் திருத்தம்
  • தொகுதி மறுவரையில் தமிழகம் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை
  • விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை.
  • நாடு முழுவதும் கல்விக்கடன் ரத்து.
  • சமையல் சிலிண்டர் ரூ.50 , பெட்ரோல் ரூ.75, டீசல் ரூ.65 ஆக குறைக்கப்படும்.
  • பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படாது.
  • மகாத்மா தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் வேலைவாய்ப்பு நாட்கள் 100ல் இருந்து 150 ஆகவும் அதிகரிக்கப்படும்.
  • மத்திய அரசின் உயர்கல்வி அமைப்புகளான ஐஐடி, ஐஐம், ஐஐஎஸ்சி ஆகியவை தமிழகத்தில் புதிதாக அமைக்கப்படும்.
  • ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கைவிடப்படும்.
  • மாணவர்களுக்கு வட்டியில்லாத கல்விக்கடனாக ரூ.4 லட்சம் வரை வழங்கப்படும்.
  • சச்சார் கமிட்டி பரிந்துரைகள்.
  • சென்னையில் 3வது ரயில் முனையம் அமைக்கப்படும்.
  • விமானக் கட்டணம் குறைக்கப்படும்.
Tags:    

Similar News