ஸ்டாலின் ஆதங்கத்திற்கு மேடையிலேயே உடனடியாக பதிலடி கொடுத்த மோடி

சென்னையில் நடந்த ரயில்வே விழாவில் முதல்வர் ஸ்டாலின் ஆதங்கத்திற்கு மேடையிலேயே உடனடியாக பதிலடி கொடுத்தார் பிரதமர் மோடி;

Update: 2023-04-09 17:22 GMT

சென்னையில் நடந்த ரயில்வே விழாவில் முதல்வர் ஸ்டாலின் ஆதங்கப்பட்டு பேசியதற்கு பிரதமர் மோடி உடனடியாக பதில் அளித்து உள்ளார்.

சென்னை - கோவை வந்தே பாரத் ரயில் சேவையின் துவக்க விழா நேற்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தின் ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அரசு சரியான அளவில் நிதி ஒதுக்கவில்லை என ஆதங்கப்படும் வகையில் பேசினார்.

ஸ்டாலின் பேச்சின் முக்கிய சாராம்சம் இது தான்...

இந்தியாவின் இரண்டாவது பொருளாதாரமாக விளங்கும்  தமிழகத்திற்கு பல ஆண்டுகளாகவே ரெயில்வே துறையால் போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்படுவது இல்லை. இது தமிழக மக்களின் ஒட்டு மொத்த கருத்தாகும்.இதன் காரணமாக அறிவிக்கப்பட்ட ரயில்வே திட்டங்கள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. அவை முற்று பெறவும் இல்லை. ரயில்வே பட்ஜெட்டிலும் நிதி ஒதுக்கப்படவில்லை. எனவே இனியாவது தமிழகத்திற்கு புதிய ரயில்வே  திட்டங்களை அறிவிப்பதோடு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

இதனை தொடர்ந்து பிரதமர் மோடி பேசுகையில் முதல்வரின் பேச்சுக்கு பதிலடி  கொடுக்கும் வகையில் தனது கருத்தை பதிவு செய்தார். அவரது பேச்சின் சாராம்சம் இது..

தமிழகம் வேகமாக வளர்ந்து வருகிறது. அதற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நடப்பு நிதியாண்டில் தமிழகத்தின் ரெயில்வே திட்டங்களுக்கு மத்திய அரசு ரூ.6 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது. இது இதுவரை எப்போதும் இல்லாத அளவிற்கு அதிக பட்ச நிதி ஒதுக்கீடு ஆகும்.

இதற்கு முன் கடந்த 2004முதல் 2014ம் ஆண்டு வரை (தி.மு.க.வின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ) ஒதுக்கப்பட்டு நிதி அளவு 800 கோடி தான். கடந்த 2014 முதல் 2023 வரை தமிழகத்தில் தினமும் சுமார் 900 கி.மீ நீள சாலைகள் தான் அமைக்கப்பட்டன. ஆனால் 2014 முதல் 2023 வரை  தினமும் அமைக்கப்படும் தேசிய நெடுஞ்சாலைகளின் அளவு 2 ஆயிரம் கிலோ மீட்டர்கள் ஆகும். இதற்காக கடந்த ஆட்சிகளில் ஒதுக்கப்பட்ட நிதி ரூ.1200 கோடி தான். தற்போது  ரூ.8200கோடிிநிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு மோடி பேசினார்.

ஸ்டாலின் ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என ஆதங்கத்தை வெளியிட்ட நிலையில் பிரதமர் மோடியோ ரயில்வே திட்டங்களுக்கு மட்டும் அல்ல, தரை வழி சாலை திட்டங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி விவரத்தை ஆண்டு வாரியாக வெளியிட்டு உடனடியாக பதிலடி கொடுத்து முதல்வர் ஸ்டாலின் வாயை அடைக்கும் வகையில் பேசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News