இணை அமைச்சர் எல். முருகன் மத்திய பிரதேசத்தில் போட்டி!

ஒடிசாவில் இருந்து, மத்திய ரெயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் போட்டியிடுகிறார்.

Update: 2024-02-14 05:30 GMT

நாடு முழுவதும் காலியாக இருக்கின்ற மாநிலங்களவையின் 56 காலி இடங்களுக்கான தேர்தல் வருகிற 27-ந்தேதி நடைபெற உள்ளது. அன்றே வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கலுக்கான கடைசி நாள், நாளையுடன் முடிவடைகிறது. இந்நிலையில் இந்த தேர்தலுக்கான போட்டியில் பா.ஜ.க. வெளியிட்டு உள்ள பட்டியலில், மத்திய தகவல் தொழில்நுட்ப இணை அமைச்சர் எல். முருகன் மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர், மக்களவை தேர்தலில், நீலகிரி தொகுதியில் போட்டியிடுவார் என கூறப்பட்ட நிலையில், இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதன்படி, மத்திய ரெயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஒடிசாவில் இருந்து போட்டியிடுகிறார். இதேபோன்று உமேஷ் நாத் மகராஜ், மாயா நரோலியா, பன்சிலால் குர்ஜார் ஆகியோரும் மத்திய பிரதேசத்தில் இருந்து போட்டியிடுகின்றனர்.

Tags:    

Similar News