முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ரூ.10 கோடி தர வேண்டும்- நடிகை நஷ்டஈடு கேட்டு வழக்கு
தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது வழக்கு தொடர்ந்த நடிகை தற்போது நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.;
அமைச்சர் மணிகண்டன் தனக்கு இழப்பீடாக ரூ.10 கோடி அளிக்க வேண்டும் - நடிகை தற்போது நஷ்டஈடு கேட்டு வழக்கு
தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது வழக்கு தொடர்ந்த நடிகை தற்போது நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.
தமிழ் திரைப்பட நடிகை சாந்தினி முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியதாக அளித்த புகாரின் பேரில் மணிகண்டன் கைது செய்யப்பட்டார். இதுகுறித்த வழக்கில் ஜாமீன் பெற்று சமீபத்தில் மணிகண்டன் வெளிவந்துள்ளார்.
இந்நிலையில் திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழும்போது பிரச்னை ஏற்பட்டால் இழப்பீடு கோரலாம் என்ற உத்தரவின் அடிப்படையில் நடிகை, மணிகண்டன் மீது வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி தனக்கு இழப்பீடாக ரூ.10 கோடி அளிக்க வேண்டுமென கோரி சாந்தினி வழக்கு தொடர்ந்துள்ளார்.