தேமுதிக தலைவருடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் மரியாதை நிமித்தமாக சந்திப்பு
தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்து முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்து முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரித்துள்ளார்.
சாலி கிராமத்திலுள்ள இல்லத்தில் விஜயகாந்தை முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார். தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நலம் குறித்து ஸ்டாலின் கேட்டறிந்தார்.அப்போது அமைச்சர் துரைமுருகன், திமுக எம்.பி ஆ.ராசா உடனிருந்தனர்.
சென்னை சாலி கிராமத்திலுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இல்லத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை நேரில் சென்றுள்ளார். அவருடன் அமைச்சர் துரைமுருகன், திமுக எம்.பி ஆ.ராசா ஆகியோர் உடனிருந்தனர். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடைபெற்றதாகவும், விஜயகாந்தின் உடல்நலம் குறித்து முதல்வர் கேட்டறிந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அப்போது தேமுதிக சார்பில் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நிதி அளிக்கப்பட்டதாக தெரிகிறது.
பரபரப்பான தமிழக அரசியல் சூழலில் ஸ்டாலின் - விஜயகாந்த் சந்திப்பு மிகுந்த முக்கியத்துவத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் முதல்முறை எம்.எல்.ஏவாக பதவியேற்றதை அடுத்து, விஜயகாந்தை நேரில் சந்தித்து உதயநிதி ஸ்டாலின் ஆசி பெற்றது குறிப்பிடத்தக்கது.
விஜயகாந்தை முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து பேசியது முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஒருவேளை புதிய கூட்டணிக்கு அச்சாரமா என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கான விடை அடுத்தடுத்த அரசியல் நிகழ்வுகளின் மூலம் தெரியவரும்.