இந்தியாவை மீண்டும் சீண்டும் மாலத்தீவு!..

மாலத்தீவில் இந்தியர்கள் 43 பேர் உட்பட 12 நாடுகளை சேர்ந்த 186 பேரை வெளியேற்றுவதாக அறித்துள்ளது.;

Update: 2024-02-15 06:15 GMT

இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள மாலத்தீவின் பரப்பளவில் மிகச்சிறிய நாடு என்றும் மக்கள் தொகையும் சிறியாத உள்ளது. எனினும் புவிசார் அரசியல் ரீதியாக மாலத்தீவு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும். குறிப்பாக இந்தியாவுக்கு மாலத்தீவு அரசியல், அதிக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது. அந்த வகையில் இந்தியாவுடன் இணக்கமான போக்கையே மாலத்தீவில் முன்பு இருந்த அரசுகள் கடைப்பிடித்து வந்தன. எப்படி, இலங்கை, சீன ஆதிக்கத்தில் சிக்கியதோ, அதே போல், சீனா விரித்த வலையில் மாலத்தீவும் தற்போது மாட்டிக் கொண்டது.

மாலத்தீவின் கட்டமைப்பை மேம்படுத்தும் சீனாவின் ஒப்பந்ததிற்கு மாலத்தீவு ஒப்புதல் அளித்ததே இதற்கு சான்றாக கூறப்படுகிறது. மேலும் சீனாவின் பக்கம் சாய்ந்த மாலத்தீவின் புதிய அதிபர் முகமது முயாஸ், அப்பட்டமான சீனா ஆதரவு போக்கை கடைப்பிடித்து வருகிறார். தேர்தல் நேரத்தின் போதே இந்தியாவிற்கு எதிரான முழக்கத்தை அவர் முன் வைத்தார். இதில் வெளிநாட்டவர்கள் வெளியேற்றப்படுவர் என அவர் முன்வைத்த வாக்குறுதி நினைவுக்கூரத்தக்கதாகும்.

இதை செயல்படுத்தும் விதமாக, அவர், அதிபராக பெறுபேற்றதும், முதல் முறையாக நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது, மாலத்தீவில் மருத்துவ சேவைகளுக்காக ஈடுப்படுத்தப்பட்டுள்ள ஹெலிகாப்டர்கள் மற்றும் இந்திய ராணுவம் உடனடியாக வெளியேற்றப்படும் என்று அறிவித்தார். இந்த சூழலில் தான் மாலத்தீவின் அரசியல் போக்கு தலைகீழாக மாறியது. அந்நாட்டில் இந்தியா, பெரு முதலீடுகளை செய்து வந்த நிலையும் தேர்தலுக்கு பின்னர் மாறியுள்ளது.

எனவே தான் மாலத்தீவின் இந்திய எதிர்ப்பு போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி எண்ணினார். இந்தியாவில் உள்ள மாலத்தீவுக்கு இணையான எழில் கொண்ட லட்சத்தீவை பட்டை தீட்ட முடிவு செய்து, அவரே அங்கு சென்று பலகோடி ரூபாய் மதிப்பிலான சுற்றுலா சார்ந்த திட்டங்களை, தொடங்கி வைத்தார். அது மட்டுமல்லாமல் பிரதமர் மோடி, லட்சத்தீவில் எடுத்து அவரது சமூக வலைதளத்தில் வெளியிட்ட புகைப்படங்களும் லட்சத்தீவுக்கு வாருங்கள் என அவர் விடுத்த அழைப்பும் சர்வேதேச அளவில் டிரெண்டிங் ஆனது.

இதனை தொடர்ந்து அனைவரது கவனமும் லட்சத்தீவு பக்கம் திரும்பி அதன் அழகை ரசிக்க தொடங்கினர். பிரதமர் மோடியின் இந்த செயலால் மாலத்தீவு அரசு அதிர்ந்து போனது. மேலும் அந்நாட்டு அமைச்சர் மரியம் ஷயுனா, இந்தியர்களுக்கு எதிர்மறையான கருத்துத்தை பதிவிட்டார். ஆந்த பதிவு இந்திய இளைஞர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. மலத்தீவிவுக்கு ஹனிமூன் செல்ல முன்பதிவு செய்திருந்த பல புது மணதம்பதிகள் அவற்றை ரத்து செய்தனர்.

அது மட்டுமல்லாமல், பாய்காட் மாலத்தீவ் என்ற ஹேஷ்டேக், மிகப்பெரிய அளவில் டிரெண்டிங் ஆனாது. மாலத்தீவை சேர்ந்தவர்கள் இந்தியாவுக்கு எதிராக கசப்பான கருத்துகளை வெளியிட்டதை பிரபல நடிகர் அஷ்ய குமார் வன்மையாக கண்டித்திருந்தார். மேலும் இந்திய தீவுகளை சுற்றிப்பார்ப்போம் - சொந்த நாட்டின் சுற்றுலாவை ஆதரிப்போம் என்றும் அவர் பதிவிட்டிருந்தார். இந்திய சுற்றுலாப் பயணிகள், குறிப்பாக புதுமண தம்பதியர்களின் பெருமளவிலான மாலத்தீவில் பயணம் அந்நாட்டிற்கு இது நாள் வரை அதிக வருவாய் ஈட்டித்தந்தது.

இந்நிலையில் இந்தியர்களில் சுற்றுலா திட்டம் லட்சத்தீவின் பக்கம் திரும்பியதால் மாலத்தீவுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படும் சூழல் உருவாக்கியுள்ளது. இந்த அதிர்ச்சியில், மாலத்தீவு, அந்நாட்டில் வசிக்கும் இந்தியர்களை குறிவைக்க தொடங்கியுள்ளது. இந்தியர்கள் 43 பேர் உட்பட 12 நாடுகளை சேர்ந்த 186 பேரை வெளியேற்றுவதாக அறித்துள்ளது. இவர்களில் அதிகப்பட்சமாக 83 பேர் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள்.

அதற்கு அடுத்தப்டியாக இந்தியாவை சேர்ந்த 43 பேரும், இலங்கையை 25 பேரும் நேபாளத்தை சேர்ந்த 8 பேரும் அடங்குவார்கள். இவர்கள் சட்டத்திற்கு புறம்பாக வியாபாரம் செய்வதாகவும், தங்கள் வைத்துள்ள வணிக நிறுவனங்கள் மூலம் பெறப்படும் பணத்தை வெளிநாட்டை சேர்ந்தவர்களில் வங்கி கணக்கில் செலுத்துவதாகவும் தெரிவித்துள்ள மாலத்தீவு அவர்களது வணிக நிறுவனங்கள் மூடப்படும் என்றும் அறிவித்துள்ளது.

இதில் கவனிக்க வேண்டியது என்றவென்றால் மாலத்தீவு அரசு வெளியேற்றியுள்ள இந்தியர்கள் 43 பேர் உட்பட 186 வெளிநாட்டவர் பட்டியலில் சீனாவை சேர்ந்த ஒருவர் பெயர் கூட இல்லை என கூறப்படுகிறது. இது தான் தற்போது பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

Tags:    

Similar News