கலகல செல்லூர் ராஜுவை கடுப்பேத்திய பத்திரிக்கையாளர்
எந்த பேட்டியாக இருந்தாலும் கலகலப்பாகவே பதில் சொல்லும் செல்லூர் ராஜு, ஓபிஎஸ் பற்றிய கேள்விக்கு கடுப்பானார்;
மதுரையில் பைக்காரா பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் தனது தமிழ்மணி அறக்கட்டளையின் மூலம் இலவச மருத்துவ முகாம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு.
அப்போது செய்தியாளர்கள் அவர்களை அவரை சந்தித்தனர். எடப்பாடி பழனிச்சாமியின் பதவி தற்காலிக பதவி என்று முதல்வர் பேசியது குறித்த கேள்விக்கு, எடப்பாடி பழனிச்சாமி உழைப்பால் வந்தவர். படிப்படியாக உழைத்து முதல்வரானவர். அப்பாவுக்கு பின் வந்தவர் இல்லை. தொண்டர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, விரைவில் பொதுச் செயலாளராக ஆக இருக்கிறார் என்றார்.
ஓபிஎஸ் உண்மை சுற்றுப்பயணம் செய்யவிருக்கிறாரே என்ற கேள்விக்கு, கடுப்பான செல்லூர் ராஜு, அட போங்கப்பா உங்களுக்கு இதே வேலையா போச்சு. தேவையில்லாமல் கேட்கிறீர்கள் . சும்மா திரும்பத் திரும்ப இதையே கேப்பீங்களா? நான் பேட்டியே கொடுக்கல என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் .