திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா

திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா நாளை சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது.

Update: 2024-02-23 11:07 GMT

முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி.

மகத்தில் பிறந்தால் ஜெகத்தை ஆளலாம் என்பது சோதிட நிபுணர்களின் கணிப்பு. அந்த கணிப்பின் படி மகத்தில் அதாவது மாசி மாதம் மகம் நட்சத்திரத்தில் பிறந்து தமிழகத்தை ஆண்டவர் தமிழகத்தின் முன்னாள் முதவல்வர் ஜெ. ஜெயலலிதா.


ஜெ. ஜெயலலிதா, தமிழக அரசியலில் ஒரு புரட்சிகரமான தலைவியாக விளங்கியவர். திரையுலக நட்சத்திரம் என்ற நிலையிலிருந்து, அதிமுகவின் பொதுச்செயலாளராகவும், ஆறு முறை தமிழக முதல்வராகவும் பணியாற்றியவர்.

அரசியல் பிரவேசம்:

திரை உலகில் நட்சத்திரமாக ஜொலித்த அவர் தனது அரசியல் முன்னோடி எம்ஜிஆரின் அழைப்பை ஏற்று 1982-ல், அதிமுகவில் சேர்ந்தார். 1983-ல், ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதிமுக பொதுச்செயலாளர்

1989-ல், எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின்னர், அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சியை ஒன்றிணைத்து, வலுப்படுத்த ஜெயலலிதா எடுத்த நடவடிக்கைகள் அவருக்கு 'அம்மா' என்ற பெயரை பெற்றுத் தந்தன.

சாதனைகள்:

முதல்வர் பதவிகள்: ஜெயலலிதா ஆறு முறை தமிழக முதல்வராக பணியாற்றினார். பெண்களுக்கு அதிகாரமளிப்பு, அவர்களின் முன்னேற்றத்திற்காக ஜெயலலிதா பல திட்டங்களை செயல்படுத்தினார். குறிப்பாக, 'குடும்பத் தலைவிகளுக்கு இலவச LPG இணைப்பு', 'பெண்களுக்கு இலவச பஸ் பாஸ்' போன்ற திட்டங்கள் மிகவும் பிரபலமானவை.

மற்ற சாதனைகள்: ஜெயலலிதா ஆட்சியில், கல்வி, மருத்துவம், வேளாண்மை, உள்கட்டமைப்பு போன்ற துறைகளில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டன.

பிறந்த ஆண்டு மற்றும் இறப்பு:

1948ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ம் தேதி மண்ணுலகில் பிறந்த ஜெயலலிதா 2016 ம் ஆண்டு டிசம்பர் மாதம் ௬ம் தேதி விண்ணுலகை அடைந்தார். 

தமிழக அரசியலில் திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்து முதல்வராக சாதனை படைத்தவர்கள் எம்ஜிஆர் அவரது அரசியல் வாரிசு ஜெயலலிதா என்ற இருவர் மட்டுமே. அவரது பிறந்த நாள் விழா நாளை தமிழகம் முழுவதும் அதிமுகவினரால் சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது.

இது தொடர்பாக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கழக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், கழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியார் அவர்களின் அறிவுறுத்தலின்படி, கழகத்திற்காகவும், தமிழக மக்களுக்காகவும் தன்னையே அர்ப்பணித்து தவ வாழ்வு வாழ்ந்திட்ட நம் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 76வது பிறந்த நாள் (24.2.2024, சனிக்கிழமை) அன்று கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவரும் திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் ஆங்காங்கே புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருஉருவப் படங்களை வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, அன்னதானம் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

24.2.2024, சனிக்கிழமை கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறேன்.

காலை 9.00மணி: சோமரசம்பேட்டை

காலை 9.30மணி: கோப்பு

காலை 10.00மணி: ஜீயபுரம்

காலை 10.15மணி: பெட்டவாய்த்தலை (சிறுகமணி)

காலை 11.00மணி: முசிறி

காலை 11.30மணி: துறையூர்

காலை 12.00மணி: மண்ணச்சநல்லூர்

அதுசமயம் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளை, வார்டு கழக நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி கவுன்சிலர்கள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், செயல்வீரர்கள், வீராங்கனைகள், தொண்டர்கள் மற்றும் மகளிரணியினர், பூத் கமிட்டி பொருப்பாளர்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில்  கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News