இந்திய அரசியலுக்கான துவக்க விழா மேடை: ஸ்டாலின் பிறந்த நாள் விழா பேச்சு
Inaugural platform for Indian politics, Stalin's birthday speechஇந்திய அரசியலுக்கான துவக்க விழா மேடை எனது பிறந்த நாள் விழா என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது பிறந்த நாள் விழாவில் பரபரப்பாக பேசினார்.
எனது பிறந்தநாள் விழா இந்திய அரசியலுக்கான மேடை என்று சென்னையில் நடந்த பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் மு. க. ஸ்டாலின் பரபரப்பாக பேசினார்.
Inaugural platform for Indian politics, Stalin's birthday speechதி.மு.க .தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு. க. ஸ்டாலினுக்கு இன்று வயது 70 .ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் இரண்டாவது முறையாக இன்று பிறந்தநாள் விழாவை கொண்டாடி இருக்கிறார். இதற்காக இன்று காலை அவர் அண்ணா, கருணாநிதி சமாதிகளில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
Inaugural platform for Indian politics, Stalin's birthday speechஇதனைத் தொடர்ந்து சென்னையில் மு. க. ஸ்டாலின் 70 வது பிறந்தநாள் விழா பிரம்மாண்ட பொதுக்கூட்டம் இன்று இரவு நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக அமைச்சருமான துரைமுருகன் தலைமை தாங்கினார்.
Inaugural platform for Indian politics, Stalin's birthday speechஇந்த கூட்டத்தில் காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வரும் சமாஜ்வாடி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி உட்பட அகில இந்திய தலைவர்கள் பலரும் கலந்துகொண்டு, மு. க. ஸ்டாலினை வாழ்த்தி பேசினார்கள்.
இறுதியாக மு. க. ஸ்டாலின் நிறைவுரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
Inaugural platform for Indian politics, Stalin's birthday speech14 வயதில் நான் கோபாலபுரத்தில் தி.மு.க. இளைஞர் இயக்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தி பணியாற்றத் தொடங்கினேன். போராட்டங்களில் பங்கேற்று சிறைச்சாலைக்கு சென்றேன். தமிழகத்தில் பட்டி தொட்டியென எல்லா இடங்களிலும் என் கால் பட்டு உள்ளது .என் கால்படாத இடமே இல்லை என்று சொல்லலாம். எல்லா இடங்களிலும் தி.மு.க. கொடி ஏற்றி இருக்கிறேன்.
Inaugural platform for Indian politics, Stalin's birthday speechநான் இந்த நிலையை அடைவதற்கு எனது கடின உழைப்பு தான் காரணம். அறிஞர் அண்ணா போல் எனக்கு பேச தெரியாது. கருணாநிதி போல் எழுத தெரியாது. ஆனால் இந்த இருவர் போல் என்னால் உழைக்க முடியும். அந்த உழைப்பு தான் என்னை வெற்றியடைய வைத்து இருக்கிறது.
Inaugural platform for Indian politics, Stalin's birthday speechஇன்று இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வந்துள்ள அரசியல் கட்சி தலைவர்கள் என்னை வாழ்த்தி வஇருக்கிறார்கள். என்னிடம் அவர்கள் தேசிய அரசியல் வருகைக்காக மிக எதிர்பார்க்கிறார்கள். அந்த வகையில் இந்த பிறந்தநாள் விழா எனது பிறந்தநாள் விழா மட்டுமல்ல. இந்திய அரசியலுக்கான ஒரு மேடை என தெரிவித்துக் கொள்கிறேன்.
Inaugural platform for Indian politics, Stalin's birthday speechநடைபெற இருக்கிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெறுவோம். ௨௦௨௪ நாடாளுமன்ற தேர்தலில் பாரதீயை ஜனதாவை வீழ்த்த நாம் அனைவரும் ஒன்று சேர வேண்டும். அந்த ஒற்றுமை தான் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும். மத்தியில் உள்ள மோடி அரசு சர்வாதிகாரமாக செயல்படுகிறது.
Inaugural platform for Indian politics, Stalin's birthday speechஒற்றை செங்கலை வைத்துக்கொண்டு தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்து விட்டோம் என்கிறார்கள். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வெறும் 12 கோடி ரூபாய்மட்டும் ஒதுக்கி இருக்கிறார்கள். இது எந்த வகையில் நியாயம்?
Inaugural platform for Indian politics, Stalin's birthday speechஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கு நாம் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மசோதா நிறைவேற்றினால் அதனை இங்கு உள்ள ஆளுநர் கிடப்பில் போட்டு உள்ளார். மகாபாரதத்திலும் சூதாட்டம் இருந்தது என்கிற ஒரே காரணத்திற்காக அவர் இப்படி செய்கிறார் என்று நினைக்கிறேன்.
இவர் அவர் பேசினார்.