சங்கரன்கோவில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ முத்துச்செல்வி திமுகவில் இணைந்தார்
சங்கரன்கோவில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ முத்துச்செல்வி முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.;
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துச்செல்வி தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார்.
அதேபோல் முன்னாள் மாவட்டச் செயலாளரும் வழக்கறிஞருமான குமார் பாண்டியன் தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
இந்த நிகழ்ச்சியின்போது தென்காசி திமுக மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் உடனிருந்தார்.