ராமநாதபுரம் தொகுதியில் 5 பன்னீர் செல்வங்களால் திணறும் வாக்காளர்கள்
ராமநாதபுரம் தொகுதியில் 5 பன்னீர் செல்வங்களால் சின்னங்களை கண்டு பிடித்து வாக்காளர்கள் வாக்கு செலுத்த முடியாமல் திணறி வருகிறார்கள்.;
ராமநாதபுரத்தில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் சின்னம் மற்ற ஓ பன்னீர்செல்வத்துடன் கலந்து வாக்கு பதிவு எந்திரத்தில் வைக்கப்பட்டு உள்ளது. இதனால் வாக்காளர்கள் வாக்களிக்க முடியாமல் திணறி வருகிறார்கள்.
ராமநாதபுரத்தில் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் 5 பேர் போட்டியிடுகின்றனர். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 5 பேர் அங்கே போட்டியிடுகின்றனர். முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
இது போக மற்ற நான்கு ஓபிஎஸ்களும் சுயேச்சைகளாக போட்டியிடுகின்றனர். அவர்களில் ஒருவர் உசிலம்பட்டியில் வசிப்பவர், மற்றொருவர் காட்டூரைச் சேர்ந்தவர், இருவர் மதுரையைச் சேர்ந்தவர்கள். எல்லோரும் சுயேச்சை என்பதால் கண்டிப்பாக வாக்குகள் சிதறும் வாய்ப்புகள் உள்ளன. இதில் வேட்பாளர் நம்பர் 61ன் பெயர் பன்னீர்செல்வம். இவரின் அப்பா பெயர் ஒட்டகரத்தேவர். முன்னாள் முதல்வரின் ஓ பன்னீர்செல்வம் தந்தையின் பெயரும் ஒட்டகரத்தேவர். தமிழில் பன்னீர்செல்வம் என்ற பெயர் பொதுவானது, ஒட்டகரத்தேவர் என்பது பொதுவானது அல்ல. ஆனாலும் அதே பெயர் கொண்டவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். 'ஓ'வில் தொடங்கும் பெயர் அரிது. மற்ற பன்னீர்செல்வங்களின் அப்பாக்களின் முறையே ஒச்சப்பன், ஒய்யாரம் மற்றும் ஒய்யாத்தேவர் ஆகும்.
இப்படி 5 பேர் ஒரே பெயரில் மனு தாக்கல் செய்ததன் மூலம் தமிழக அரசியல் வரலாற்றிலேயே மிகப்பெரிய சாதனை ஒன்று ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் நடந்துள்ளது. ஏற்கனவே இப்படி பல முறை நடந்துள்ளது.
கடந்த சட்டசபை தேர்தலில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தொகுதியில் திமுக சார்பில் மூத்த அரசியல்வாதி கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் போட்டியிட்டார். அவர் எதிர்த்து 6 ராமச்சந்திரன் சுயேச்சையாக போட்டியிட்டனர். அதுதான் அதிக நபர்கள் ஒரே பெயரில் போட்டியிட்ட தொகுதி ஆகும். அதற்கு அடுத்து ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் 5 ஓ பிஎஸ் போட்டியிடுவது இரண்டாவது பெரிய சாதனை ஆகும்.