ஆண்டிமுத்து ராஜா எனும் இவர் கடந்த 1963ம் ஆண்டு மே மாதம் 10 ம் தேதி வேலுா் கிராமத்தில் பிறந்தார். 16 ஆவது இந்திய மக்களவையின் உறுப்பினராகவும் இருந்தார். நீலகிரி மக்களவைத் தொகுதியில் இருந்து தி.மு.க சார்பில் போட்டியிட்ட இவர் இறுதியாக 15 ஆவது மக்களவை அமைச்சரவையில் தகவல் மற்றும் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக 16 நவம்பர், 2010 வரை பொறுப்பு வகித்தது அனைவரும் அறிந்தது. மக்களவைக்கு நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றார்.
14 ஆவது மக்களவை அமைச்சரவையில் தகவல் தொலைத்தொடர்பு அமைச்சராக அங்கம் வகித்த இவர் 17 அக்டோபர், 2008 அன்று பின்தேதியிட்ட அமைச்சரவை பொறுப்பு விலகல் கடிதத்தை திராவிட முன்னைற்றக் கழகத் தலைவர் மு. கருணாநிதியிடம் இலங்கைத் தமிழர்கள் கொல்லப்படுவதை இந்திய அரசாங்கம் தடுத்து நிறுத்தக் கோரி சமர்ப்பித்தார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் அங்கம் வகித்த திமுக அமைச்சர்கள் அனைவரும் இலங்கைத் தமிழரின் படுகொலையைக் கண்டித்து பொறுப்பு விலகல் கடிதம் கொடுத்தவர்களில் இவரும் ஒருவராவார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைசெயல்திட்டக்குழுவில் உறுப்பினராக இருந்தார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப்பரப்புச் செயலாளராகவும் இருந்தார்.
பின்னர் 2019 ஆம் ஆண்டு நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், நீலகிரி தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இது அவரது பிறந்தநாள் செய்திக்கானது மட்டுமானது.. மற்ற தேவையற்ற விபரங்கள் இன்று தேவையற்றது அப்படித்தானே....