சட்டம் ஒழுங்கை அரசு பாதுகாக்கவில்லை: எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை தமிழக அரசு பாதுகாக்கத் தவறிவிட்டதாக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.;

Update: 2022-05-25 09:00 GMT

இது தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று தனது சமூகவலைதள பதிவில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில்,குறிப்பாக சென்னையில் கொலை சம்பவங்கள் அதிகரித்து,தலைநகர் கொலைநகராக மாறி இருக்கிறது என நேற்று நான் தெரிவித்திருந்தேன். இந்த நிலையில், நேற்று மாலையே சென்னையில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் அரசியல் பிரமுகர் ஒருவர் வெட்டி கொல்லப்பட்டிருக்கிறார்.

இது சமூக விரோதிகளுக்கு காவல்துறை மீதான அச்சம் முற்றிலும் போய்விட்டதையும் அதன் காரணமாகவே சட்டத்திற்கு புறம்பான செயல்கள் தமிழகத்தில் அதிகரித்து விட்டதையும் அப்பட்டமாக காட்டுகிறது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்காமல் வேடிக்கை பார்க்கிறதா இந்த விடியா அரசு? இவ்வாறு, அவர் கூறியுள்ளார். 

Tags:    

Similar News