தேர்தலில் வாக்குப்பதிவு முடிந்தது: மவுனம் காத்து வரும் ஒ.பன்னீர்செல்வம்

தேர்தலில் வாக்குப்பதிவு முடிந்து ஒரு வாரம் ஆக போகும் நிலையிலும் ஓ. பன்னீர்செல்வம் மவுனம் காத்து வருகிறார்.

Update: 2024-04-23 03:28 GMT

ஓ பன்னீர் செல்வம்.

லோக்சபா தேர்தல் முடிந்ததில் இருந்தே தமிழ்நாட்டில் முக்கியமான ஒரு அரசியல் தலைவர் தீவிரமாக மௌனம் காத்து வருகிறார்.

தேசிய அளவில் லோக்சபா தேர்தல் தீவிரம் இன்னும் முடியவில்லை. லோக்சபா தேர்தலுக்கான கொண்டாட்டங்கள், பிரச்சாரங்கள் மிக தீவிரமாக நடந்தபடியே இருக்கின்றன. 26ம் தேதி ராஜஸ்தான் உள்ளிட்ட மாவட்டங்களில் இரண்டாம் கட்ட தேர்தல் நடக்க உள்ளது.

இதற்கான பிரச்சாரங்கள் தீவிரம் அடைந்து வருகின்றன. ஆனால் தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரங்கள், தேர்தல் எல்லாம் முடிந்து அமைதியான சூழ்நிலை நிலவுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை நாடு முழுக்க லோக்சபா தேர்தல் திருவிழா பிரம்மாண்டமாக தொடங்கியது. கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை 2024 மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 லோக்சபா தொகுதிகளுக்கு முதற்கட்டமாக தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 534 லோக்சபா தொகுதிகளில் 102 தொகுதிகளுக்கு முதல் கட்டத் தேர்தல் நடந்தது.

தமிழகத்தில் 69.46% வாக்குகள் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாகத் தர்மபுரியில் 81.48% வாக்குகள் பதிவாகி உள்ளது. கடந்த தேர்தலுடன் ஒப்பிடும் போது வாக்கு சதவிகிதம் கணிசமாகக் குறைந்துள்ளது. குறிப்பாகத் தூத்துக்குடி, தேனி, சிவகங்கை உள்ளிட்ட நட்சத்திர தொகுதிகளில் வாக்குப்பதிவு அதிகம் குறைந்துள்ளது.

தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்துவிட்டதால்.. தமிழ்நாட்டில் தேசிய அரசியலை பின்பற்றுபவர்கள் தவிர மற்றவர்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விட்டனர். ஆனால் ஒரே ஒரு அரசியல் தலைவர் மட்டும் இன்னும் பெரிதாக தேர்தல் பிரஷரில் இருந்தே வெளியேறவில்லையாம்.லோக்சபா தேர்தல் முடிந்ததில் இருந்தே தமிழ்நாட்டில் முக்கியமான ஒரு அரசியல் தலைவர் தீவிரமாக மௌனம் காத்து வருகிறார்.அவர் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

அவர் பாஜக கூட்டணியில் தனியாக பலா பழம் சின்னத்தில் தேர்தலில் நின்றார். இந்த தேர்தலில் அவர் இரட்டை இலையில் நிற்க முயன்றார். ஆனால் முடியவில்லை. அதன்பின் பாஜக தாமரையில் நிற்க அவரை வற்புறுத்தியது. அவர் அதை ஏற்கவில்லை. வேறு வழியின்றி கடைசியில் சுயேச்சை வேட்பாளர்களின் சின்னத்தில் நின்றார்.

இப்படி இருக்க அவருக்கு போட்டியாக மேலும் 4 ஓ பன்னீர்செல்வம் நின்றனர். மொத்தமாக அங்கே 5 ஓ பன்னீர்செல்வம் நின்றனர். இந்த நிலையில்தான் தன்னுடைய அரசியல் எதிர்காலம் பற்றி நெருக்கமான சிலரிடம் அவர் புலம்பி இருக்கிறாராம். அதிமுகவில் இனி இணைவது கஷ்டம், சொந்தமாக நின்று பலத்தை காட்ட நினைத்தேன். ஆனால் அதிலும் சின்னம் பிரச்சனை, பெயர் குழப்பம் என்று அரசியல்செய்துவிட்டனர்.

தேர்தல் முடிவு வந்த பின் என்ன நடக்குமோ தெரியவில்லை, ஒரே குழப்பமாக இருக்கிறது என்று புலம்பி இருக்கிறாராம். எங்கே தன்னுடைய அரசியல் வாழ்க்கைக்கு எண்ட் கார்டு போடப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் அவர் இப்படி எல்லாம் பேசிக்கிறாராம். அதோடு என் பெயரில் வேட்பாளர்களை நிற்க வைத்து கேம் ஆடியது யார் என்று தெரியும்.. எனக்கு அதெல்லாம் தெரியாமல் இல்லை. அதை ஒருநாள் பார்த்துக்கொள்வேன் என்றும் பேசி இருக்கிறாராம்.

Tags:    

Similar News