election commission can ban freebies- தேர்தல் வாக்குறுதியில் 'இலவசம்'..! கட்சிகளுக்கு கிடுக்கிப்பிடி போடுமா தேர்தல் கமிஷன்..?
election commission can ban freebies- இந்தியாவில் இலவசம் வழங்கும் அறிவிப்புகளுக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
election commission can ban freebies
election commission can ban freebies
இந்தியாவி்ல் பல மாநிலங்களில் நடக்கும் சட்டசபை மற்றும் பொதுத் தேர்தலின் போது அம்மாநிலத்தின் பிரதான ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் வெளியிடும் தேர்தல் வாக்குறுதி அறிக்கையில் பொதுமக்களுக்கு பல பொருட்களை இலவசமாக தருவதாக வாக்குறுதி அளிக்கின்றனர். இதற்கு மத்திய தேர்தல் கமிஷன் நிரந்தர தடை விதிக்க வேண்டும் என அரசியல் நோக்கர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேர்தல்- கோலாகலம்
இந்தியாவைப் பொறுத்தவரை தேர்தல் என்றாலே மக்களிடம் நன்மதிப்பைப் பெற்றவர் , சமூக பணிகளில் அக்கறை உள்ளோர் ஆகியோர் மட்டுமே தேர்தலில் போட்டியிட்டு உண்மையான வெற்றியைப் பெற்று பதவியை அலங்கரித்தது அந்தக்காலம்.
election commission can ban freebies
election commission can ban freebies
காலப்போக்கில் நாகரிகம் வளர , வளர தேர்தல் பிரச்சாரம் முதல் தேர்தல் நாளின் பூத் கமிட்டி வரை அனைவருக்கும் பணத்தினை பிரதானமாக வாரி வழங்கினால் மட்டுமே தொண்டர்கள் படை உடன் வரும் நிலையை ஏற்படுத்தி விட்டனர் அரசியல்வாதிகள். எங்கும்....பணம்...எதிலும் பணம்...என்று தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பணத்தினை வாரி இறைத்து செலவு செய்பவர்களுக்கே தேர்தலில் போட்டியிட கட்சியானது சீட் வழங்குகிறது.இதனை வேட்பாளர் தேர்வு செய்யும் நேர்முகத்தேர்வில் நேரிடையாக கேட்கிறது கட்சித்தலைமை.
அள்ளி விடும் இலவசங்கள்....
தேர்தல் நேரத்தின் போது நமக்கு வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக அவர்களுடைய ஆசையைத் துாண்டும் வகையில் ஒவ்வொரு மாநிலத்திலும் அந்த கட்சியின் வளர்ச்சிக்கேற்ப தேர்தல் வாக்குறுதியில்பல இலவசங்கள் அறிவிக்கப்படுகிறது. தேர்தலில் எங்களை வெற்றி பெறச் செய்தால் ஆட்சிக்கு வந்தபின் இந்தந்த பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்பதோடு பல இலவச திட்டங்களையும் ஒவ்வொரு கட்சியும் அறிவிப்பது வாடிக்கையான தொடர் நிகழ்வாகி வருகிறது.
election commission can ban freebies
ஒரு கட்சி இலவசம் என அறிவித்தால் அதற்கு எதிரான கட்சி அறிவிக்காவிட்டால் நமக்கு வாக்காளர்கள் வாக்களிக்காமல் விட்டுவிட்டால்? என்ற பயத்தில் அவர்களும் ஏதாவது ஒரு இலவச திட்டத்தினையோ அல்லது இலவச பொருட்களையோ போட்டி போட்டுக்கொண்டு அறிவிக்கின்றனர்.
ஊழலுக்கு வழி வகுக்கும் -இலவசம்
இந்தியாவைப் பொறுத்தவரை எந்தவொரு அரசியல் கட்சியுமே தங்களுடைய கட்சியின் சொந்த நிதியில் இருந்து எந்தவித இலவச பொருட்களையும் வாக்காளர்களுக்கு ஜெயித்தபின் வழங்குவது இல்லை. அரசின் பணத்தில் வாங்கப்பட்ட பொருட்களே இலவசமாக வழங்கப்படுகிறது. அரசின் பணம் என்றால் யார் பணம்? பொதுமக்கள் வரியாக செலுத்தும் பணம்தான் அது? அப்படி இருக்கையில் எதற்கு? இதுபோல் இலவச அறிவிப்பை அறிவித்து பொதுமக்களுக்கு ஆசை காட்டுகின்றனர் என்பதே புரியாத புதிராக உள்ளது. இந்த இலவச பொருட்களுக்கு எந்த வித நிபந்தனைகளும் ஒரு சில நேரத்தில் அறிவிக்கப்படுவதில்லை. காரணம் ஓட்டுகள் சிதறிவிடும் என்ற நோக்கில் ஒட்டுமொத்தமாக இலவசம் என தேர்தலுக்கு முன் அறிவித்துவிடுகின்றன அரசியல் கட்சிகள். பின்னர் ஜெயித்து ஆட்சிக்கு வந்துவிட்டால் அந்த இலவச பொருட்களைப் பெறுவதற்கு பல நிபந்தனைகளை விதிக்கிறது பதவியேற்ற அரசு. இதனால் பல பொதுமக்கள் ஏமாற்றமடைவது தொடர் நிகழ்வாகி வருகிறது.
தடைவிதிக்க கோரிக்கை
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் தரப்பில் தெரிவிக்கும்போது, தேர்தல் நேரங்களில் அறிவிக்கப்படும் இலவச பொருட்கள் எதனையும் எந்த அரசியல் கட்சியும் அவர்களுடைய கட்சியின் சொந்த நிதியில் இருந்து வழங்குவது இல்லை. அரசின் கஜானாவிலுள்ள பணத்தின் மூலமாகவே திட்டம்போட்டு நிதி ஒதுக்கி செலவிடுகின்றனர்.
அந்த வகையில் மக்கள் பணம் மக்களுக்கே என்ற தார்மீக அடிப்படையில்தான் இது செலவிடப்படுகிறது.இருந்தாலும் இதுபோன்ற இலவச பொருட்களை பர்ச்சேஸ் செய்வதில் துவங்கும் ஊழல் கடைசி வரை தொடர்கிறது. ஒருசில நேரங்களில் அரசிடம் போதிய நிதி இல்லாத போது மக்களுக்கு வழங்கியே ஆக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டால் இந்த செலவுகளுக்காக மாற்றுப்பாதையை தேட வேண்டிய நிலைக்கு அரசு தள்ளப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.
election commission can ban freebies
எனவே, இனி வரும் கால கட்டத்தில் நடக்க உள்ள தேர்தலைப்பொறுத்தவரை எந்த வொரு அரசியல் கட்சியுமே தாங்கள் வெளியிடும் தேர்தல் வாக்குறுதியில் இலவச பொருட்களையோ அல்லது இலவச திட்டங்கள் குறித்த அறிவிப்பினை வெளியிடக்கூடாது என தேர்தல் கமிஷன் உத்தரவிட வேண்டும். இது தொடர்ந்தால் பாதிப்பு அந்தந்த மாநில மக்களுக்கே தான். அதாவது தேர்தலுக்கு முன்பாக வாக்காளர்களைக் கவரும் வகையில் இலவசம் என அறிவிக்கும் அரசியல் கட்சிகள் ஜெயித்து ஆட்சியைப் பிடித்தபின் அப்படியே உல்டாவாக்கிவிடுகிறது. இதனால் பல பொதுமக்களாகிய வாக்காளர்கள் ஏமாற்றப்படுவதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.
அரசு பணம் என்பது மக்கள் செலுத்தும் வரியில் இருந்து கிடைப்பதுதான். வரி செலுத்தும் பணம்தான் அரசுக்கு வருமானமாக செல்கிறது. இந்த பணத்தில்தான் இலவச பொருட்களும் வழங்கப்படுகிறது. இதனால் பல நல்ல திட்டங்கள் நிதி ஆதாரம்இன்றி கிடப்பில் போடப்படுகிறது. இலவசம் என்ற ஒரு வார்த்தையை வைத்து மாநிலத்தில் பல ஊழல்கள் பெருக்கெடுத்து விடுகின்றன.
அதுமட்டும் அல்லாமல் பல வாக்காளர்களுக்கு அந்த பொருட்கள் உரிய முறையில் சென்றடைவதும் இல்லை என்ற புகார்கள் ஒவ்வொரு முறையும் ஏற்படுகிறது. எனவே நாட்டு மக்களை உழைக்கவைப்பதற்கான உத்வேகத்தினை அளிக்கும் வகையில் அரசியல் கட்சிகளின் எதிர்கால தேர்தல் வாக்குறுதிகள் இருக்க வேண்டுமே தவிர, இலவசம் என்ற ஏமாற்றத்தினை இனி எந்தவொரு அரசியல் கட்சியும் தந்துவிடக்கூடாது என்பதையே சுட்டிக்காட்டுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.
election commission can ban freebies
மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை கொண்டுவந்தாலே, மக்கள் அந்த அரசியல் கட்சிக்கு ஆதரவு அளிப்பார்கள். எனவே அரசியல் கட்சிகள் நல்ல திட்டங்களை நம்பி மக்களிடம் வாக்கு கேட்கவேண்டுமே தவிர , இலவசங்களை காட்டி அல்ல.
கர்நாடக தேர்தல்
கர்நாடக மாநிலத்தில் இம்மாதம் 10 ந்தேதி நடக்கும் சட்டசபைத் தேர்தலையொட்டி பாஜ சார்பில் தினந்தோறும் அரை லிட்டர் பால் இலவசம், வருடத்திற்கு 3 சிலிண்டர்கள் இலவசம்,என அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதேபோல் காங்கிரஸ் கட்சி சார்பில் மகளிருக்கு பஸ் பயணம் இலவசம், உள்ளிட்ட பல வாக்குறுதிகளை அறிவித்துள்ளது. இருந்தாலும் இதில் பல ஊழல்கள் உருவாக வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் எந்தவொரு அரசியல் கட்சியுமே எதிர்காலத்தில் அறிவிக்கும் தேர்தல் வாக்குறுதியில் இலவசம் என்ற வார்த்தையை உபயோகிக்கவே கூடாது என நிரந்தர தடைச்சட்டத்தினை இந்திய தேர்தல் கமிஷன் அறிவிக்க வேண்டும் எனவும், பல இலவசங்கள் மக்களின் உழைப்புக்கு பாதகமாக இருப்பதாவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.