பாஜக குறித்த பொன்னையன் விமர்சனம்: எடப்பாடி பழனிச்சாமி விளக்கம்
பாஜக குறித்து அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் தெரிவித்த கருத்துகள், அவரது சொந்த கருத்து என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
அண்மையில் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய மூத்த தலைவர் பொன்னையன், பாஜக வளருவது போல் அக்கட்சி தோற்றத்தை உருவாக்கி வருகிறது. பாஜகவுக்கு அதிமுக தக்க பதிலடி தர வேண்டுமென்று பேசி இருந்தார்.
இதுதொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கருத்து தெரிவித்தனர். அவர்கள் கூறியதாவது:
தமிழ்நாட்டில், குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன; சட்டம் ஒழுங்கு சரியில்லை. கைகள் கட்டப்பட்டுள்ளதால், காவல்துறையால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. தமிழகத்தை பொறுத்தவரை கொலை நடக்காத நாளே கிடையாது.
பாரதிய ஜனதா கட்சி குறித்து அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் தெரிவித்த கருத்துகள்; அதிமுகவின் கருத்தல்ல. அவரது பேச்சை, சொந்த கருத்தாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றனர்.