21-ம்தேதி திருச்சிக்கு வருகிறார் துரை வைகோ: ம.தி.மு.க.வினர் உற்சாகம்

மார்ச் 21-ம்தேதி திருச்சிக்கு வருகிறார் துரை வைகோ. இதனால் ம.தி.மு/க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Update: 2024-03-19 14:29 GMT

முதல்வர் ஸ்டாலினுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றார் மதிமுக வேட்பாளர் துரை வைகோ.

தி.மு.க. கூட்டணியில் திருச்சி நாடாளுமன்ற தொகுதி மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. திருச்சி தொகுதி ம.தி.மு.க. வேட்பாளராக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவின் மகனும், ம.தி.மு.க. முதன்மைச் செயலாளருமான துரை வைகோ போட்டியிடுகிறார். துரை வைகோ திருச்சி நாடாளுமன்ற தொகுதி ம.தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் இன்று காலை தி.மு.க. தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு க ஸ்டாலினை தனது தந்தையார் வைகோவுடன் சென்று சந்தித்து அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார்.

அப்போது அமைச்சர்கள் கே என் நேரு,பொன்முடி, துணை பொது செயலாளர் ஆ ராசா ஆகியோர் அங்கு இருந்தனர். மதிமுக தரப்பில் துணை பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா உள்பட முக்கிய நிர்வாகிகளும் சென்று இருந்தனர்.

இதனை தொடர்ந்து ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோ மார்ச் 21 ஆம் தேதி காலை திருச்சிக்கு வருகிறார். திருச்சி வந்ததும் திருச்சி மாநகர் புறநகர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உடனும், கூட்டணி  கட்சி நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்துகிறார். 22 ஆம் தேதி திருச்சி சிறுகனூரில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அவரை ஆதரித்து பேசுகிறார்.

திருச்சியை பொறுத்தவரை மதிமுக கடந்த 2024 ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் போட்டியிட்டது .அப்போது ம.தி.மு.க.வின் மூத்த தலைவராக இருந்த எல் .கணேசன் பெரும்பான்மையான  வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்பியாக பணியாற்றினார். அதனை தொடர்ந்து 20 ஆண்டுகள் கழித்து இப்போது மீண்டும் அ.தி.மு.க.விற்கு திருச்சி நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டு இருப்பதால் திருச்சி மாவட்ட ம.தி.மு.க. நிர்வாகிகள் உற்சாகமடைந்துள்ளனர். அவர்கள் தேர்தல் பணியாற்றும் முனைப்பில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

Tags:    

Similar News