அமைச்சர் அன்பில் மகேஸுடன் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த துரை வைகோ எம்பி

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியுடன் வந்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார் துரை வைகோ எம்பி;

Update: 2024-08-13 15:55 GMT

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியுடன் வந்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த துரை வைகோ எம்பி.

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் மறுமலர்ச்சி திமுகவின் திருச்சி பாராளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற துரைவைகோ  திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளி கல்வி துறை அமைச்சருமான  அன்பில் மகேஸ் பொய்யாமொழி  தலைமையில் திருச்சி மாநகரக் கழகச் செயலாளர் மதிவாணன் மற்றும் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் முன்னிலையில் இன்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாநகர பகுதிகள் கல்லுக்குழி பழைய ஆர் டி ஓ ஆபீஸ், உழவர் சந்தை ரோடு, கே கே நகர் பஸ்ஸ்டாண்ட், ஏர்போர்ட்ரோடு, பால்பண்ணை, இந்திரா நகர், எம் ஜி ஆர் சிலை, டி வி எஸ் டோல்கேட், முதலியார்சத்திரம், காஜாப்பேட்டை, அரசமரம், மல்லிகைபுரம், அண்ணாசிலை, எடத்தெரு, இருதயபுரம், பெரியார்நகர், வரகனேரி,காந்திமார்க்கெட், நத்தர்ஷா பள்ளிவாசல், சிந்தாமணி, ஆண்டாள்வீதி, மகாராணி தியேட்டர் ரோடு, அரபிக்குளம், பாபுரோடு, கீழக்கரை, தஞ்சை ரோடு, சந்துக்கடை , ஆகிய பகுதிகளில் பகுதிகளில் நன்றி தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பகுதி கழகச் செயலாளர்கள் மணிவேல், தர்மராஜ்,    விஜயகுமார் ,ராஜ்முஹம்மது,   பாபு,  மோகன் மற்றும் மாநகர பகுதி வட்டக் கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்

வாக்காளர் நன்றி தெரிவிப்பின்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசும்போது  திராவிடமாடல் அரசை நடத்திக் கொண்டிருக்கின்ற தமிழ்நாடு முதலமைச்சருடைய ஆதரவை பெற்று வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உங்களுடைய ஆதரவை பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக இன்றைக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கின்ற நமது அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய நமது எம் பி துரைவைகோ  உங்களிடம் இன்றைக்கு நன்றி சொல்ல இங்கே வருகை தந்திருக்கின்றார். அவர்களோடு சேர்ந்து நாங்களும் நன்றி சொல்ல வருகை தந்திருக்கின்றோம் என்று சொல்லும் பொழுது வெறும் நன்றி என்பதை வார்த்தைகளால் மட்டுமல்லாமல் உங்களுடைய பகுதிக்கு என்னென்ன தேவை என்பதை உணர்ந்து அவருடைய நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்தும் அந்தந்த பகுதிக்கான வளர்ச்சிக்கு நிதியை ஒதுக்குவேன் என்று சொல்லி இருக்கின்றார்.

நம்முடைய துரை வைகோவுடன் சேர்ந்து நாங்களும் வருகை தந்திருக்கிறோம் என்று சொன்னால் வரலாறு காணாத வெற்றி தீப்பெட்டி என்கின்ற ஒரு சின்னம் அது அறிவிக்கப்பட்டு ஒரு வார காலத்திற்குள் உங்களை சந்தித்து மக்களிடம் கொண்டு சென்று இந்த ஏறத்தாழ 3 லட்சத்து 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கின்றார். அதற்காக நன்றி தெரிவிக்கின்றோம் என்றார்.

Tags:    

Similar News