உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்பு சந்தோஷத்தைக் கொண்டாடாத 3 மாவட்ட நிர்வாகிகள் : இனியாவது தலைமை கண்டு கொள்ளுமா?
dmk to be appointed ,a minister from 3 districts தமிழகத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சேலம்,தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு ஒருஅமைச்சர்கூட இல்லாததால் பொதுமக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். தலைமை நடவடிக்கை எடுக்குமா?;
dmk to be appointed ,a minister from 3 districts
தமிழக விளையாட்டுத்துறை அமைச்சராக முதல்வர் ஸ்டாலினின் மகனும் எம்எல்ஏவுமான உதயநிதி பொறுப்பேற்றுக்கொண்டதற்கு பல மாவட்டங்களில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். ஆனால் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் அந்த அளவிற்கு கொண்டாடவில்லை என்றே தெரிகிறது. இதனால் தலைமை சற்று அதிர்ச்சியடைந்துள்ளதாக கட்சி வட்டாரத்தில் பேசு பொருளாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா மறைந்தபின் கடந்த 2021 ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அதிகதொகுதிகளைக் கைப்பற்றி திமுக கூட்டணி வெற்றி பெற்று முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றார்.
இந்நிலையில் வழக்கமாகவே ஆட்சிகள் மாறினால் காட்சிகள் மாறுவது உண்டு. அதுபோலவே அதிமுகவில் முதல்வராக பதவி வகித்த இபிஎஸ் சேலத்தைச் சேர்ந்தவர் என்பதால் சேலம் மாவட்டத்துக்கு பல நலத்திட்டப்பணிகளைக் கொண்டு வந்தார். சேலம் மாநகரின் போக்குவரத்துநெரிசலைக் குறைக்கும் வகையில் பல உயர்மட்ட மேம்பாலங்கள் அதிமுக ஆட்சியில் நகருக்குள் திறக்கப்பட்டது. தலைவாசலில் கால்நடை ஆராய்ச்சி மையம். இதுபோல் பல விஷயங்கள் சேலம் மாவட்டத்திற்கு நடந்தது அதிமுக ஆட்சியில் .
dmk to be appointed ,a minister from 3 districts
கடந்த 2021ம்ஆண்டு சட்டசபைத் தேர்தலில் சேலம் மாவட்ட 11 தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியில் சேலம் வடக்கு சட்டசபைத் தொகுதியில் வக்கீல் ராஜேந்திரன் திமுக சார்பில் வெற்றி பெற்று திமுகசார்பில்ஒரே ஒரு எம்எல்ஏ மட்டுமே இருந்து வருகிறார்.இவர் கடந்த 2016 ம் ஆண்டு அதிமுக ஆட்சியிலும் இதே சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
dmk to be appointed ,a minister from 3 districts
கடந்தசில நாட்களுக்குமுன்பு உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக கவர்னர் பதவிப்பிரமாணம் செய்துவைத்தபோது எடுத்த படம் (கோப்பு படம்)
dmk to be appointed ,a minister from 3 districts
அமைச்சர்கள் பொறுப்பேற்கும்போது சேலத்திற்கு இவர் அமைச்சராவார் என நிர்வாகிகள் பெரிதும் எதிர்பார்த்திருந்த நிலையில்எம்எல்ஏ ராஜேந்திரனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. ஆனால் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி முதல்வராக பொறுப்பேற்ற போது சேலம் மாவட்டத்திலிருந்து அமைச்சராக வீரபாண்டி ஆறுமுகத்தினை நியமித்தார். முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் இருந்தபோது தற்போதைய எம்எல்ஏ ராஜேந்திரன் கோஷ்டியினர் எதிராக செயல்பட்டது தலைமைக்கும் தெரிந்த விஷயமே.முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அமைச்சராக இருந்த காலத்தில் சேலம் மாநகர் மற்றும் மாவட்டத்துக்கென பல நலத்திட்டங்களைக் கொண்டு வந்துள்ளது அனைவரும் அறிந்ததே. அதில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மிகவும் சிறப்பு வாய்ந்த திட்டமாக முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் போராடி சேலத்துக்கு கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மறைவுக்குப் பின் அவரது மகன் முன்னாள் எம்எல்ஏ ராஜா இருந்து வந்தார். அவருக்கு சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவி மட்டுமே வழங்கப்பட்டது.மாவட்ட செயலாளராக கூட அவருக்கு பதவி தரப்படவில்லை. இதனால் அவரும் பெரும் வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திடீரென அவர் காலமானார். அவரது மறைவுக்குப் பின் தற்போது அவரது மகள் கட்சிப்பணி ஆற்றி வருகிறார். மேலும் வீரபாண்டியார் மற்றொரு மகனான டாக்டர்.பிரபுவும் கட்சிப்பணியில் உள்ளார்.
இந்நிலையில் தற்போது உதயநிதி அமைச்சராக பதவியேற்கும்போது அமைச்சரவையில் மாற்றம் ஏற்படும் என எண்ணியிருந்த வேளையில் எந்த அமைச்சரையும் மாற்றாமல் துறைகள் மட்டுமே மாற்றப்பட்டுள்ளன. புதிய அமைச்சராக ஒரே ஒருவர் அதாவது உதயநிதி மட்டுமே பதவியேற்றார்.
dmk to be appointed ,a minister from 3 districts
சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு அமைச்சர்கள் யாரும் இல்லாததால் அரசின் பல நலத்திட்டங்கள் மக்களைச் சென்றடையாமல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனைக் கவனிக்க கூடுதல் பொறுப்பாக சேலத்திற்கு அமைச்சர் கே.என்.நேருவும், தர்மபுரிக்கு வேளாண்துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வமும் நியமிக்கப்பட்டிருந்தாலும் உள்ளூர் விஐபிக்கள் யாரும் அமைச்சராக்கப்படாத குறை கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் நீடித்து வருகிறது. தற்போது மீண்டும் இது தொடர்கிறது. இதனால் பொதுமக்களுக்கு பல விஷயங்கள் சென்று சேராத நிலையே நீடிக்கிறது.
என்னதான் பொறுப்பாளரை நியமித்தாலும் அவர்கள் அவர்களுடைய மாவட்டத்திற்குத் தான் முன்னுரிமை அளிப்பார்கள். இந்த மூன்று மாவட்டங்களுக்கும் யாரும் இல்லாதது போலவே காட்சியளித்துவருகிறது. இதனால் கடந்த சட்டசபை தேர்தல் முடிவினை மனதில் வைத்துக்கொண்டு கட்சித்தலைமை இம்மாவட்டங்களைப் புறக்கணிப்பு செய்யும் பட்சத்தில் வரப்போகிற 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் வாக்காளர்கள் திமுகவுக்கு எப்படி வாக்களிப்பார்கள்? அவர்களுக்கான பயன்கள் ஒன்றுமே சக்ஸஸ் ஆகவில்லையே? என்ற ஆதங்கம் ஒவ்வொரு வாக்காளனின் மனதிலும் உள்ளது. அதுமட்டும் அல்லாமல் நிர்வாகிகளும் சுறுசுறுப்பு குறைந்த நிலையில்தான் உள்ளனர். சொந்த மாவட்டத்தில் உள்ளவர்களை அமைச்சராக நியமிக்காமல் தலைமை இழுத்தடிப்பது கட்சிக்கு கெட்ட பேரைத்தான் ஏற்படுத்தும் என தெரிவிக்கின்றனர். முதல்வர் ஸ்டாலினே இந்த மாவட்டங்களுக்கு பொறுப்பாளராக இருந்தாலும் மக்கள் திருப்தியடைய மாட்டார்கள். உடனடியாக எந்த ஒரு முடிவும் எடுக்க வேண்டும் எனில் உள்ளூரில் உள்ள நபர்கள் அமைச்சராக இருக்கவேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.
சேலம் அக்காலந்தொட்டே சினிமாவின் வெற்றியை நிர்ணயிக்கும் ஊராக இருந்து வருகிறது. அதேபோல் சேலத்தில் அதிக தொகுதிகளை முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் இருந்தவரை திமுக கைப்பற்றியது. ஆனால் அவரது மறைவுக்குப் பின்னர் தலைமை சரிவர கண்டுகொள்ளாததால் கோஷ்டிகள் அதிகமானதோடு திமுகவால் வெற்றி பெற முடியாமலும் இருந்து வந்தது.
இதுமட்டும் அல்லாமல் முன்னாள் முதல்வர் இபிஎஸ்-இன் சொந்த மாவட்டம் சேலம். இதனைத் திமுக தலைமை தொடர்ந்து புறக்கணித்தால் அதிமுகவின் கோட்டையாக வரும் தேர்தலில் சேலம் மாறிவிடும் என திமுகவினர் சொல்கின்றனர். சட்டசபைத் தேர்தலில் ஒரே ஒரு தொகுதி மட்டுமே வென்றது. ஆனால் லோக்சபாவில் இதற்கு மாற்றான முடிவைத்தான் மக்கள் தருவார்கள். மக்களுக்கான பல பணிகள் தேக்கமடைந்துள்ளன. திமுக ஆளுங்கட்சியாக இருந்தாலும் நிர்வாகிகளால் ஒன்றும் செய்ய முடியவில்லையே? மக்கள் எப்படி நம்பி வாக்களிப்பார்கள்? என்று அடிமட்டத் தொண்டர்கள் முதல் நிர்வாகிகள் வரையில் புலம்புவதையே கேட்க முடிகிறது. எனவே புறக்கணிப்பு செய்யப்பட்ட மாவட்டங்களான சேலம், தர்மபுரி,கிருஷ்ணகிரி இந்த மூன்று மாவட்டங்களுக்கும் சேர்த்து இரண்டு புதிய அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டால்தான் எதிர்கால தேர்தலில் திமுக வெற்றி வாய்ப்பினைப் பெறும். இல்லையேல் கடந்த தேர்தல் நிலையேதான் நீடிக்கும் எனவும் கட்சி வட்டாரத்திலும் , வாக்காளர்களும் பேசிக்கொள்கின்றனர்.
இது போன்று ஆளுங்கட்சியால் எந்த நன்மைகளையும் பெறாத நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் எப்படி உதயநிதி அமைச்சரானதை உற்சாகத்துடன் கொண்டாட முடியும் எனவும் கேள்வி எழுப்புகின்றனர்.