திருச்சியில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை துவக்கிய தி.மு.க.
திருச்சியில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை துவக்கிய தி.மு.க.
பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கும் விதமாக பிரச்சார வாகனத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்/
இந்தியாவின் 18வது நாடாளுமன்றத்தை அமைப்பதற்காக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையில் இந்தியா கூட்டணி அமைந்து உள்ளது. கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திமுக இன்னும் வேட்பாளர்களின் பெயர்களை மட்டும் தான் அறிவிக்க வில்லை. மற்றபடி அனைத்து வேலைகளையும் செய்து முடித்துவிட்டது. பல மாவட்டங்களில் தேர்தல் பணியையும் தொடங்கிவிட்டது.
இந்நிலையில் திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் வர இருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலில் பிரச்சாரத்தை தொடங்கும் விதமாக தமிழகத்தின் நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில் தெற்கு மாவட்ட மலைக்கோட்டை பகுதி ஷோபிஸ் கார்னர் பகுதியில் பிரச்சார வாகணத்தை தெற்கு மாவட்டச் செயலாளரும் பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மாநகரச் செயலாளர் மதிவாணன், பகுதிச் செயலாளர் மோகன் மற்றும் மாவட்ட நகர் பகுதி கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.