தி.மு.க. அரசு தானாக கவிழும்: சொல்கிறார் டாக்டர் கிருஷ்ணசாமி

பொருளாதார சிக்கலில் உள்ள தி.மு.க. அரசு தானாக கவிழும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.;

Update: 2023-08-02 10:20 GMT

புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

தி.மு.க. ஆட்சியை யாரும் கவிழ்க்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் பொருளாதார சிக்கலில் சிக்கி விரைவில் தி.மு.க. தானாகவே கவிழும் சூழல் உருவாகி உள்ளதாக தென்காசியில் புதிய தமிழக கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.

தென்காசியில் புதிய தமிழகம் கட்சி நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ள நிலையில் பல்வேறு முன்னேற்பாடு பணிகளை செய்து வருகிறது. அந்த வகையில் நிர்வாக பணிகளுக்கு ஏற்ற வகையில் தென்காசியை மூன்று பகுதிகளாக பிரித்து புதிய மாவட்ட செயலாளர்களை அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி நியமித்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் கிருஷ்ணசாமி கூறியதாவது:-

மது இல்லா தமிழகத்தை உருவாக்கும் வகையில் அதற்கான தூதுவராக ரஜினியை இந்த வாரத்தில் சந்திக்க உள்ளேன். இதனைத் தொடர்ந்து பல்வேறு நடிகர்களை சந்திக்க இருக்கிறேன்.

தி.மு.க. அனைத்து திட்டங்களையும் அறிவித்துவிட்டு தற்போது எதற்கெடுத்தாலும் இல்லை இல்லை கூறிக் கொண்டு வருகிறது. அ.தி.மு.க. கடந்த ஐந்து ஆண்டுகளில் வாங்கிய கடனை விட இந்த இரண்டு ஆண்டுகளில் தி.மு.க .அதிகமான கடனை வாங்கி உள்ளது. அந்த வகையில் பெரிய பொருளாதார சிக்கலில் தவித்து தி.மு.க. ஆட்சி தானாகவே கவிழும் சூழல் உருவாகி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் டாக்டர் கிருஷ்ணசாமி கூறுகையில் போக்குவரத்து தொழிலாளர்களைப் பொறுத்தவரை ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் பணியிலிருந்து ஓய்வு பெறும் போது அதற்காக வழங்கப்படும் பிராஃபிடண்ட் பண்ட் உள்ளிட்டவை குறித்து தமிழக அரசு பத்து நாட்களில் வெள்ளை அறிக்கை அளிக்காமல் விட்டால் இதுகுறித்து நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Tags:    

Similar News