திமுக வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு : பொதுச் செயலாளர் அதிரடி அறிவிப்பு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் திமுக வேட்பாளர் பட்டியலை, மாவட்ட செயலாளர்கள் தயார் செய்து 31ம் தேதிக்குள் தலைமைக்கு அனுப்ப வேண்டும் என்று பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.;

Update: 2022-01-30 10:51 GMT

திமுக பொதுச் செயலாளர் துரை முருகன்.

இது குறித்து திமுக பொது செயலாளர் துரை முருகன் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது :

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கடந்த 27ம் தேதி காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற மாவட்ட செயலாளர், பொறுப்பாளர்கள் - நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவின் அடிப்படையில், நகர்ப்புற உள்ளாட்சி மன்றத்தேர்தலில் கூட்டணிக் கட்சியினர் போட்டி யிடும் வாய்ப்புள்ள இடங்களை அவர்களை அழைத்துப் பேசிட வேண்டுமென முடிவு செய்யப்பட்டது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுரைப்படி, கடந்த நாடாளுமன்ற, சட்டப் பேரவைத் தேர்தலில் நம் முடைய கூட்டணியில் இடம் பெற்றிருந்த கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகளுடன் சுமூகமாக கலந்தாலோசித்து முடிவு செய்திடவேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பேச்சுவார்த்தை மூலம் தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களை தவிர, திமுக போட்டியிடும் இடங்களை முறைப்படுத்தி, அவற்றில் போட்டியிடும் திமுகவேட்பாளர் பெயர் பட்டியலை, 31ம் தேதிக் குள் (நாளை) தலைமைக் கழகத்துக்கு அனுப்பி வைத்திடமாவட்ட செயலாளர், பொறுப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News