கொரோனா வைரஸ் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது அல்ல - மன்சுக் மாண்டவியா
உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது அல்ல என்று மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.;
நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாஇ கொரோனா வைரஸ் பாதிப்பின் தீவிரம் கணிசமாக குறைந்துவிட்டது என்று தெரிவித்தார். ஒரு வைரஸ் 100 முறைக்கு மேல் உருமாற்றமடையும் போதுஇ அதன் தீவிரம் குறையும். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் இதுவரை 223 முறை உருமாற்றம் அடைந்துள்ளது என்று கூறினார். மேலும்இ ஆண்டுக்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை மக்களைத் தாக்கும் இன்ப்ளூயன்சா பாதிப்பு போலஇ கொரோனாவும் நம்முடனேயே இருக்கும். ஆனால் தற்போது உருமாற்றம் அடைந்துள்ள கொரோனா வைரஸ் ஆபத்தானது அல்ல. அதன் தீங்கு விளைவிக்கும் தன்மை காலப்போக்கில் கணிசமாக குறைந்துவிட்டது என்று விளக்கமளித்தார். தொடர்ந்து பேசிய அவர்இ ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ்இ ஏழைகளுக்கு 5 லட்சம் ரூபாய் வரை இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதால்இ 13 கோடி மக்கள் சிகிச்சைக்காக பணம் செலவழிக்காமல் வறுமைக் கோட்டிற்கு மேல் சென்று பயனடைந்துள்ளனர் என்று மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.