விவசாயிகள் பற்றி சர்ச்சை கருத்து: கங்கனா ரணாவத்திற்கு பா ஜ க எச்சரிக்கை

விவசாயிகள் பற்றி சர்ச்சை கருத்து வெளியிட்ட நடிகை கங்கனா ரணாவத்திற்கு பா ஜ க மேலிடம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

Update: 2024-08-26 13:15 GMT

நடிகை கங்கனா ரணாவத் எம்பி.

கட்சி கொள்கைகள் குறித்து பேச கங்கனா ரணாவத்திற்கு அனுமதி இல்லை' என விவசாயிகள் மீதான அவரது அறிக்கைக்கு பாஜக மேலிடம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் மண்டி தொகுதி எம்பியும் பிரபல இந்தி நடிகையுமான கங்கனா ரணாவத் அவ்வப்போது ஏதாவது சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டு பிரச்சினைகளில் சிக்கி கொள்வது வாடிக்கையான ஒன்றாக இருந்து வருகிறது. 

அந்த வகையில் அவர் இப்போது விவசாயிகள் இயக்கம் தொடர்பாக அவர் வெளியிட்ட  கருத்துக்களில் இருந்து பாரதிய ஜனதா கட்சி திங்கட்கிழமை விலகி உள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு மண்டியின் சிட்டிங் எம்.பி.யை பாஜக மேலிடம் கேட்டுக் கொண்டுள்ளது. விவசாயிகள் இயக்கம் குறித்த ரணாவத்தின் கருத்துக்களுக்கு உடன்பாடு இல்லை என தெரிவித்துள்ள பா.ஜ. மேலிடம், நடிகையும், அரசியல்வாதியுமான கங்கனா ரணாவத்துக்கு, கொள்கைப் பிரச்னைகளில் பேச உரிமை இல்லை என்றும் கூறி உள்ளது.

விவசாயிகள் இயக்கம் குறித்து பாலிவுட் நடிகையும் பாஜக எம்.பியுமான மண்டி கங்கனா ரனாவத் கூறிய கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இதற்கு பாரதிய ஜனதா கட்சி பதில் அளித்துள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு மண்டியின் சிட்டிங் எம்.பி.யை பாஜக மேலிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

விவசாயிகள் இயக்கம் பற்றி கங்கனா அப்படி என்னதான் சொன்னார் என பார்ப்போமா?

உண்மையில், ஞாயிற்றுக்கிழமை, மண்டியின் சிட்டிங் எம்.பி., அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றால், விவசாயிகளின் போராட்டம் வங்கதேசத்தைப் போன்ற ஒரு சூழ்நிலையை உருவாக்கியிருக்கலாம் என்று கூறியிருந்தார்.மேலும் கங்கனா ரணாவத்  எம்பி ட்விட்டரில் பகிர்ந்த வீடியோவில், இப்போது ரத்து செய்யப்பட்ட மூன்று விவசாயச் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டத்தின் போது 'உடல்கள் தூக்கில் தொங்குகின்றன, கற்பழிப்பு நடக்கின்றன' என்று குற்றம் சாட்டி இருந்தார்.

கங்கனாவின் இந்த பதிவிற்கு தான் பாஜக மேலிடம் தற்போது பதில் அளித்து கடுமையான எச்சரிக்கையையும் வெளியிட்டு உள்ளது.

விவசாயிகள் இயக்கம் குறித்த ரணாவத்தின் கருத்துக்களுடன் உடன்படாத பாஜக  கங்கனா ரனாவத், கொள்கைப் பிரச்சினைகளைப் பற்றி பேச அதிகாரம் இல்லை என்று கூறியது. மேலும், 'சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ் மற்றும் சப்கா பிரயாஸ்' ஆகிய சமூக நல்லிணக்கக் கொள்கைகளை கடைபிடிக்க கட்சி உறுதியாக உள்ளது என்று பா.ஜ.க. கூறி உள்ளது.

இதுகுறித்து பாஜக வெளியிட்டுள்ள அறிக்கையில், 'விவசாயிகள் இயக்கத்தின் பின்னணியில் பாஜக எம்பி கங்கனா ரனாவத் கூறிய கருத்து அக்கட்சியின் கருத்து அல்ல. கங்கனா ரனாவத் கூறிய கருத்துக்கு பாரதிய ஜனதா கட்சி தனது மறுப்பை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் கங்கனா ரனாவத், கட்சியின் கொள்கைப் பிரச்னைகள் குறித்து அறிக்கை வெளியிட அனுமதிக்கப்படுவதில்லை அல்லது அதற்கான உரிமையும் அவருக்கு இல்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற எந்த கருத்தையும் வெளியிடக்கூடாது என கங்கனா ரனாவத்துக்கு பாரதிய ஜனதா கட்சி உத்தரவிட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சி, 'சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ் மற்றும் சப்கா பிரயாஸ்' கொள்கைகளையும் சமூக நல்லிணக்கத்தையும் பின்பற்ற உறுதிபூண்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News