இளைஞர்களை கவரும் வகையில் காங்கிரஸ் செயலாற்றும் - எம்.பி விஜய் வசந்த் பேச்சு

ராகுல் காந்தியைப் பிரதமராக்க இளைஞர்களை கவரும் வகையில் காங்கிரஸ் செயலாற்றும் என விஜய் வசந்த் எம்.பி. தெரிவித்தார்.

Update: 2021-09-06 06:36 GMT

சுரண்டை நகர காங்கிரஸ் அலுவலகத்தில் மறைந்த முன்னாள் எம்பி வசந்தகுமார் பட திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

சுரண்டை நகர காங்கிரஸ் அலுவலகத்தில் வசந்தகுமார் எம்பி பட திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் முரளிராஜா, சுரண்டை நகர காங்கிரஸ் தலைவர் எஸ்.கே.டி. ஜெயபால் ஆகியோர் முன்னிலை வகித்தார்.

கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்பி தனது தந்தையும், முன்னாள் எம்.பியுமான மறைந்த வசந்தகுமார் படத்தை திறந்து வைத்து பேசினார். அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் ஜனநாயகத்தை காக்க கூட்டணி கட்சி மட்டுமின்றி எதிர்க்கட்சிகளுக்கும் சமவாய்ப்பு வழங்குகிறார். முதல்வர் மற்றும் அமைச்சர்கள் புகழ்பாட அனுமதிக்கவில்லை. மக்கள் கோரிக்கைகள் அனைத்துக்கும் செவிசாய்த்து மக்களின் முதல்வராக செயல்படுகிறார்.

சட்டமன்றத்தில் தென்காசி தொகுதியின் அடிப்படை தேவைக்காக 25 நிமிடம் உரையாற்றிய பழனி நாடாருக்கு வாழ்த்துக்கள்.ராகுல் காந்தியைப் பிரதமராக்க இளைஞர்களை கவரும் வகையில் காங்கிரஸ் செயலாற்றும். புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க மாவட்டம் தோறும் காங்கிரஸ் கட்சி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படும். காங்கிரஸ் கொண்டு வந்த அனைத்து பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்று பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய ஆபத்தை மத்திய அரசு ஏற்படுத்துகிறது.

மக்களுக்கான அரசாக இல்லாமல் பெரும் பணக்காரர்களுக்கு அரசாக மத்திய மோடி அரசு உள்ளது.எனவே இனி வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ராகுல் காந்தி பிரதமராக பதவியேற்பார், சுரண்டையை நகராட்சியாக தரம் உயர்த்த பெருமுயற்சி எடுத்த தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடாருக்கு நடத்தப்படும் பாராட்டு விழாவில் கலந்து கொள்வேன என பேசினார்.

முன்னதாக சுரண்டை சிவகுருநாதபுரத்தில் உள்ள காமராஜர் சிலை மற்றும் வ.உ.சி.சிதம்பரனார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் ஆலங்குளம் ரூபன் பிரகாஷ், காமராஜ், ஏசு ராஜா, மாநில சேவாதளம் வள்ளிமுருகன், இளைஞர் காங்கிரஸ் சுப்பையா, தெய்வேந்திரன் ஆகிேயார் கலந்து காெண்டனர். 

Tags:    

Similar News