ஈரோடு கிழக்கு முதல் சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் முன்னிலை

Update: 2023-03-02 03:26 GMT

இளங்கோவன்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. ஆக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. மறைவை தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரியும், மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அ.தி.மு.க வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ் தென்னரசு நிறுத்தப்பட்டார். இது தவிர நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா, தே.மு.தி.க வேட்பாளராக ஆனந்த் உள்பட மொத்தம் ௭௭ வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

இந்த இடைத்தேர்தலில் கடந்த 27ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் 74.69 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன. வாக்குப்பதிவு முடிவடைந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் அதனுடன் இணைந்த கட்டுப்பாட்டு கருவிகள் வாக்கு எண்ணிக்கை மையமான ஈரோடு அரசு பொறியியல் கல்லூரிக்கு எடுத்து செல்லப்பட்டு பாதுகாப்பாக அடுக்கி வைக்கப்பட்டன. அந்த மையத்திற்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை துவங்கியது. சரியாக காலை எட்டு மணிக்கு ஸ்ட்ராங் ரூம் எனப்படும் அறையின் அகற்றப்பட்டு தேர்தல் நடத்தும் அதிகாரி சிவகுமார் முன்னிலையில் திறக்கப்பட்டது. அப்போது காங்கிரஸ் மற்றும் அதிமுக வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் உள்பட முக்கிய கட்சிகளின் முகவர்கள் அங்கு இருந்தனர்.

சரியாக காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதல் சுற்று முடிவில் இளங்கோவன் 3642 ஒட்டுகளும் அதிமுக வேட்பளர் தென்னரசு 1414 வாக்குகளும் நாம் தமிழர் கட்சி 19 வாக்குகளும் தேமுதிக 10 வாக்குகளும் பெற்று இருந்தனர்.

Similar News