பசுமைவீடு திட்டத்தில் 20000 வீடுகள் கட்ட முதல் கட்ட நிதி ஒதுக்கீடு

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டத்தின் (CMGHS) கீழ் ரூ. 299 கோடிக்கு நிர்வாக அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு

Update: 2022-03-30 04:57 GMT

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டத்தின் (CMGHS) கீழ் 20,000 வீடுகள் கட்ட ரூ. 299 கோடிக்கு நிர்வாக அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தமிழக முதலமைச்சரின் பசுமை வீடு திட்டத்தின்கீழ் 20,000 வீடுகள் கட்ட முதற்கட்டமாக ரூ.299 கோடி நிதி விடுவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:

"2021-22 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் மதிப்பீட்டில் சூரிய சக்தியால் இயங்கும் முதலமைச்சரின் பசுமை இல்லத் திட்டத்தின் (CMGHS) கீழ் டோக்கன் மட்டுமே வழங்கப்படுகிறது என்றும்,எனவே, 2021-22 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சரின் பசுமை வீடு திட்டத்தை (CMGHS) செயல்படுத்த முதற்கட்டமாக ரூ.299 கோடியை அரசு அனுமதித்து விடுவிக்குமாறு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இயக்குநர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில்,ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இயக்குனரின் முன்மொழிவை விரிவாக ஆய்வு செய்த பிறகு, 2021-2022 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சரின் பசுமை வீடு திட்டத்தின் (CMGHS) கீழ் ரூ.299 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது",என்று தெரிவித்துள்ளது.



 


Similar News