திமுக எம்பி ஆ.ராசாவின் மனைவி மரணம்- தமிழக முதலமைச்சர் இரங்கல் கடிதம்

மறைந்த பரமேஸ்வரி அம்மையாருக்கு தமிழக முதலமைச்சர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.;

Update: 2021-05-29 17:35 GMT

திமுக எம்பி ஆ.ராசாவின் மனைவி தமிழக முதலமைச்சர் இரங்கல் கடிதம் எழுதியுள்ளார்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட திமுக எம்பி ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி சிகிச்சை பலனில்லாமல் இன்று இரவு காலமானார்.அரசியல் தலைவர்கள் பலர்  இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.அன்னாரது மறைவுக்கு தமிழக முதலமைச்சர் இரங்கல் கடிதம் எழுதியுள்ளார்.

இரங்கல் கடிதத்தில் தி.மு.கழகத்தின் துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான ஒன்றிய முன்னாள் அமைச்சர் ஆ.ராசா வாழ்விணையர் பரமேஸ்வரி மரணமடைந்த செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.

திராவிடத் தத்துவத்தினை அரசியல் பாடமாகப் பயின்று பொதுவாழ்வில் ஈடுபட்ட ஆ.ராசா உயர்விலும் - தாழ்விலும், நெருக்கடிகளிலும் - சோதனைகளிலும் தோன்றாத் துணையாக உடனிருந்து அவரது வெற்றிக்குப் பக்கபலமாக இருந்தவர் அம்மையார் பரமேஸ்வரி. அவரது மறைவு ஏற்படுத்தும் பெருந்துயரால் வேதனையில் வாடும் ஆ.ராசா கரங்களைப் பற்றி ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பரமேஸ்வரி அம்மையாரின் பிரிவால் வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆ.ராசா இந்தத் துயரில் இருந்து மீண்டெழ, உடன்பிறப்பு என்ற சொல்லுக்கேற்ப கழகம் தோள் கொடுத்துத் துணை நிற்கும்..


Tags:    

Similar News