விஜயகாந்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கனிமொழி பிறந்தநாள் வாழ்த்து

விஜயகாந்தின் 69 வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கனிமொழி கருணாநிதி ஆகியோர் டுவிட்டர் மூலம் வாழ்த்து செய்தி தெரிவித்துள்ளனர்.;

Update: 2021-08-25 05:47 GMT

விஜயகாந்த், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பைல் படம்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று தனது 69-வதுபிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி தமிழக முழுவதும் உள்ள தேமுதிகவினர் கோயில்களில் சிறப்பு பூஜைசெய்தும், அன்னதானம் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

இதுபோல போல சமூக வலைதளங்களில் விஜயகாந்த் பிறந்த நாள் விழா வைரலாகி வருகின்றது. திரை உலகினர், அரசியல் கட்சி தலைவர்கள், சமூக வலைதளங்கள் மூலமாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள பிறந்த நாள் வாழ்த்துச்செய்தியில், " தே.மு.தி.க. நிறுவனரும் தமிழ் மக்களின் அன்புக்குரிய கதாநாயகருமான நண்பர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நீண்ட நாட்கள் உடல்நலத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழ அவரது பிறந்தநாளில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

அதேபோல், கனிமொழி கருாணநிதி எம்.பி தனது டுவிட்டர் பக்கத்தில் கேப்டன் விஜயகாந்த்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து டுவிட் செய்துள்ளனர். "தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்" என கனிமொழி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் விஜயகாந்த் பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News